என்னது துணிவு படத்துல இவர் தான் அஜித்தின் மகளா ? – நெட்டிசன்கள் கிளப்பிய புதிய சர்ச்சை.

0
764
ajith
- Advertisement -

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் நடித்துள்ளார் வாரிசு திரைப்படத்துடன் வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். அஜித் முன்பு நடித்த படங்களை போல இப்படத்தில் ஒரு குழுவை வைத்து அஜித் கொள்ளையடிக்கிறார? என்றால் அங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் Your Bank என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர். வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

- Advertisement -

அவர்களுக்கு சவால் விடும் வேலையே அஜித் செய்து வருகிறார். வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார். சர்வதேச அளவில் ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன்? இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறிவைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும், அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர்? அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன? என்பதை மையத்தமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜித் மற்றும் வினோத் இணைந்த பணியாற்றிய படமான “வலிமை” படத்திற்கு பிறகு இப்படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைத்திருக்கிறார் இயக்குனர் வினோத். படத்தில் அஜித் பார்க்கும் அனைவரையும் சுட்டு தள்ளுகிறார். முதல் பாதி கால்களில் ராக்கெட்டுகளை காட்டியது போல மிகவும் விறுவிறுப்பாக செய்கிறது. படத்தில் கொஞ்சம் உண்மை தண்மை குறைவாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் கதையே ஆரம்பமாகிறது.

-விளம்பரம்-

படத்தில் அஜித் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயமாகவும், தன்னுடைய தனித்தன்மையான உடல் மொழியிலும் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியார் அஜித்துடன் துணையாக நவீன் ஆயிதங்களை கையாளும் சிங்கபெண்ணாக வருகிறார். மேலும் வில்லனாக வரும் ஜான் கொக்கைன் மற்றும் சமுத்திரக்கனி, பிற கதாப்பாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையே சரியாக செய்திருக்கின்றனர்.

இந்த படத்தில் அஜித்திற்கும் மஞ்சுவாய் இருக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக காண்பித்திருக்க மாட்டார்கள். இப்படி ஒரு நிலையில் மஞ்சுவாரியர் தான் இந்த படத்தில் அஜித்தின் மகள் என்று புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. மேலும், அது சம்மந்தமான பல மீம்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement