என்னது, பப்ளிசிட்டிக்காக தான் உழைப்பாளர் தினத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறாரா அஜித் – நடிகையின் பதிவால் எழுந்த புதிய சர்ச்சை.

0
404
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை படம் ஒரு சில நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் வியாபார ரீதியாக வசூலை குவித்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் பிறந்தநாள் மே 1 ஆம் தேதி தான் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அஜித் தன் பிறந்தநாளை கொண்டாடினர்.

- Advertisement -

அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மீரா :

இதற்கு பிரபலங்கள் துவங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளத்தில் அஜித் குறித்த ஹேஷ் டேக்குகளும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இன்று மே 7 ஆம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மீரா சோப்ரா. இவர் வேறு யாரும் இல்லை. தமிழில் 2005 இல் வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரெ அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. ஆனால் இவரது இயற்பெயர் மீரா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா உறவினர் மீரா சோப்ரா :

டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சார்ந்தவர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா,மனாரா சோப்ரா ,பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார்.இவ்வளவு பிரபலங்களின் சகோதரியாக இருந்தும் இவரது சினிமா வாழ்விற்கு யாரும் உதவ வில்லை. அன்பே அருயிரெ படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுகு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த மீரா சோப்ரா.

-விளம்பரம்-

மே 7 தான் அஜித் பிறந்தநாளா :

இருப்பினும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவும் இல்லை பட வாய்ப்பும் அமையவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் என்ன கஞ்சா அடிச்சி இருக்கீங்களா என்று கேலி செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், ஒரு சிலரோ அஜித்தின் பிறந்தநாள் மே 7 தான் என்று கூறி வருகின்றனர்.

பப்ளிசிட்டிக்காக பிறந்தநாளை மாற்றினாரா அஜித் :

அது போக மே 7 தான் அஜித் பிறந்தநாள் என்று அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களை கூட பதிவிட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக ‘அஜித்தின் உண்மையான பிறந்தநாள் மே 7 தான் என்றும், காதல் கோட்டை பட வெற்றிக்கு பின்னர் தனது பிறந்தநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என பப்ளிசிட்டிக்காக தொழிலாளர்கள் தினமான மே 1 என தனது பிறந்தநாளை மாற்றி திருத்திக்கொண்டார் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement