சக நடிகருடன் காதலா.! பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை.!

0
329

ஒரே நைட்டில் ஒபாமா ஆக போகிறேன் என்று வடிவேலு ஒரு படத்தில் கூறி இருப்பார். ஆனால், ஒரே ஒரு பாடல் முலம் உலக பேமஸ் ஆனவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். 

View this post on Instagram

Happy birthday osha!💕

A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier) on

தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத்தியதோடு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

- Advertisement -

இதையும் படியுங்க : படத்தின் இயக்குனரே காஜல் புகைப்படத்தை பதிவிட்டு மோசமாக விமர்சனம்.! ரசிகர்கள் ஷாக்.! 

இது ஒரு புறம் இருக்க ஒரு ஆதார் லவ் திரைப்படம் தோல்வியடைந்ததற்கு முழு காரணம், அந்த படத்தில் நடித்த பிரியா வாரீயர் மற்றும் ரோஷன் தான் என்று அந்த படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரியா வாரியரும், ரோஷனும் காதலித்து வருவதாக ஒரு செய்தி வைரலானது.

இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஷனின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு நீண்ட மெசேஜ் ஒன்றையும் பதிவிட்டது தான். ஆனால், இதுகுறித்து பேசிய பிரியா வாரியர், ரோஷனை நான் காதலிப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி தான், காலப்போக்கில் மறைந்துபோகும் என்று கூறியுள்ளார்.

Advertisement