கொரோனாவால் மகிழ்ச்சியில் இருக்கிறாரா சிம்பு? மீம்களுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்

0
16543
maanadu

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சிம்பு ஒரு காலத்தில் பிஸியான ஒரு நடிகராக இருந்து வந்தார். ஆனால், இடையில் இவரது படங்கள் தொடர்ந்து தோல்வி கண்டது. அதற்கு முக்கிய காரணமே சிம்பு சரியாக ஷூட்டிங் வருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சொன்ன குற்ற சாட்டுகள் தான். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ‘மாநாடு’ படத்தில் கமிட் ஆனார்.

Image result for simbu corona memes

- Advertisement -

இதனால் சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கம் போல இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பிற்க்கு வராமல் உற்சுற்றிக்கொண்டு டிமிக்கி கொடுத்துகொண்டே வந்தார் சிம்பு. இதனால் இந்த இரண்டு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். ” மாநாடு” படம் கைவிடப்பட்டது என்று அறிவித்த நிலையில் சிம்புவின் தாய் உஷா இந்த பஞ்சாயத்தில் தலையிட்டு, சிம்பு இந்த படத்தை ஒழுங்காக முடித்து கொடுப்பார் என்று வாக்குறித்து கொடுத்தார்.

இதையும் பாருங்க : நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வர்லனா பரவாயில்ல, ஏன்னா? ஆனால், திரிஷா – வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.

-விளம்பரம்-

தாய் சொல்லை தட்டாத சிம்பு, பின்னர் சபரி மலைக்கு விரதமிருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சென்னையில் சில நாள் ஷூட்டிங் நடந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் தான் ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் துவங்கியது. அதில் பங்கேற்க முடியாது என சிம்பு கூறிவிட்டார் என வதந்தி பரவியது. அதனால் கோபமான தயாரிப்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சிம்பு முன்பு போல இல்லாமல் நேரத்திற்கு வந்து தன் காட்சிகளை அனைத்தையும் நடித்து கொடுக்கிறார் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள வணிக வளாகங்கள் திரையரங்குகள், பள்ளிகள், மக்கள் கூடும் பொது இடங்கள் என அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மேலும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை கூட தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் பல்வேறு திரைப்படங்களில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் சிம்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் என்று பல்வேறு மீம்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பதிலளித்துள்ள மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,

கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கொரணோவுக்கா இடம் கொடுப்போம்? இந்த Back up இல் ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் STR தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் “மாநாடு”⁦ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement