விஜய்மா விக் வச்சிட்டு இருக்காரா? ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த விஜய்யின் நண்பர் ஸ்ரீமன்.

0
74948
vijaysriman
- Advertisement -

உலகில் அளவில் ரசிகர்கள் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண் என்று பலர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளனர். தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பர்களாக இருந்தவர்கள் இருந்தவர்கள் நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத். மூவரும் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார். இதில் ஸ்ரீமண் மற்றும் சஞ்சீவ் விஜய்யின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். அதே போல ஸ்ரீநாத், விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய முழு வீடியோவை வெளியிட்ட சன் நிறுவனம்.

மேலும், ஸ்ரீமன் விஜய் நடத்த லவ் டுடே துவங்கி பைரவா படம் வரை விஜய்யுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒரு சக நடிகர் என்பதை விட இவர் விஜய்யின் நண்பர் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு விஜய் பற்றிய பல விஷயங்கள் இவருக்கு தெரியும். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமீபத்தில் ட்விட்டரில் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில், நடிகர் ஸ்ரீமன் சார், விஜய்மா விக் அணிவாரா என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீமன், இருக்கலாம் இல்லாமலும் போகலாம் இருப்பினும் அவர் எது செய்தாலும் அது படக்குழு படத்திற்காக செய்கின்ற விஷயம் முதலில் படத்தை பாருங்கள் சகோதரா தற்போது எந்த கருத்தையும் சொல்லாதீர்கள் தற்போது அமைதியாக கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

நீங்கள் விஜய் 64 – ல் மாஸ்டரில் வாழ்வீர்கள் என்று பதில் அளித்துள்ளார். ஸ்ரீமனின் இந்த பதிலை நம்பாத அந்த ரசிகர், இது உங்கள் fake id-யா என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்க்கு ஒரு சிறு செல்ஃபீ வீடியோ ஒன்றை பதிவிட்டு ஏன் fake நண்பா ? இது நான் தான் என்று பதில் அளித்துள்ளார் ஸ்ரீமன்.

Advertisement