பரிசு கொடுத்ததோடு தன் குடும்பத்திற்கு ஐசரி கணேசன் செய்த உதவி – அவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கிய நன்றி தெரிவித்த கூல் சுரேஷ்.

0
144
coolsuresh
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்காக கடந்த ஓராண்டிற்கும் மேலாக குரல் கொடுத்து வந்த கூல் சுரேஷுற்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பரிசு வழங்கியதோடு அவரது குடும்பத்திற்காக செய்திருக்கும் உதவி பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி படத்தில் பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : 5 வயது மகள் இருக்கும் நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகருடன் ரகசிய இரண்டாம் திருமணம். கர்ப்பத்தை அறிவித்த செவ்வந்தி சீரியல் 

திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பிரபலங்கள் வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் நன்றி விழா கூட நடந்திருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்ரி கணேசன் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். அதேபோல நடிகர் சிம்புவிற்கு கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த படத்திற்காக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வந்த கூழ் ஸ்டிரைச்சிக்கு எந்த பரிசையும் வழங்கவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வந்தார்கள். இப்படி படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் படத்தின் நாயகன் செம்புவிற்கும் பரிசு கொடுத்த ஐசரி கணேசனிடம் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து விளம்பரம் செய்து வந்த கோவில் சுரேஷிற்கு நிச்சயம் ஏதாவது ஐசரி கணேசன் பரிசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் கூல் சுரேஷிற்கு ஐசரி கணேசன் புதிதாக ஐபோன் ஒன்றை பரிசாகஅளித்திருக்கிறார். மேலும் கூல் சுரேஷ் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஐசரி கணேசன் ஏற்றிருக்கிறார். தனக்கு iphone பரிசளித்த ஐசரி கணேசனுக்கு கூல் சுரேஷ் குச்சி மிட்டாய் பரிசளித்து அதில் விந்து திணிவு காடு ஐசரி கணேசனுக்கு வணக்கத்தை போடு என்று தன்னுடைய டிரேட் மார்க் வசனத்தை எழுதி நன்றி தெரிவித்திருக்கிறார்.

தனக்கு பரிசு கொடுத்ததோடு தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்கும் உதவி செய்த தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் சுரேஷ் கணேஷ், சார் இனிமேல் நீங்கள் இருக்க வேண்டிய இடம் என் வீட்டு பூஜை அறையில் என்று கூறிவிட்டு பூஜை அறையில் சாமி படங்களுக்கு மத்தியில் ஐசரி கணேசன் புகைப்படத்தை வைத்து வணங்கி இருக்கிறார் கூல் சுரேஷ்.

Advertisement