விஜய் மற்றும் சஞ்சீவின் 25 வருட நட்பு பற்றி மனம் திறக்கிறார் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி !

0
2909
preethi sanjeev

நான் லீடாக நடிச்ச சன் டிவி ‘பொம்மலாட்டம்’ சீரியல் முடிஞ்சதும், நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கேன். இப்போ, ஃபேமிலியோடு நிறைவாக நேரத்தைச் செலவிட முடியுது” – புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ப்ரீத்தி சஞ்சீவ்.
preethi sanjeevநடிகர் விஜய் ஃபேமிலி உடன் உங்க ஃபேமிலி பாண்டிங் பற்றி சொல்லுங்கள்

என் கணவர் சஞ்சீவும் விஜய் அண்ணாவும் 25 வருட நண்பர்கள். எங்க பசங்க, ‘விஜய் மாமா, சங்கீதா அத்தை’னு அவங்க மேலே உயிரையே வெச்சிருக்காங்க. விஜய் அண்ணாவின் குழந்தைகளும் ‘அத்தை, மாமா’னு எங்க மேலே உயிரை வெச்சிருக்காங்க.

எங்க ரெண்டு பேரின் வீடுகளும் பக்கத்துலதான் இருக்குது. அடிக்கடி சந்திச்சுப்போம். ஒரே காலக்கட்டத்தில்தான் என் கணவரும் விஜய் அண்ணாவும் சினிமா ஃபீல்டுக்குள் வந்தாங்க. விஜய் அண்ணா வெள்ளித்திரையிலயும், என் கணவர் சின்னத்திரையிலயும் டாப் ஆர்டிஸ்ட்டா இருக்காங்க.ரெண்டு பேருமே பல சவால்களைச் சந்திச்சுதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்காங்க. அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பொக்கிஷம் மாதிரி. அதனால தொடர்ந்து அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ல அன்பு அதிகரிச்சுகிட்டே இருக்குது. அதைப் பார்த்து நான் பூரிச்சுப்போறேன்.
sanjeev - vijay
மெர்சல் படம் பார்த்தாச்சா?

நான் முதல்ல விஜய் அண்ணா ரசிகை. அதுக்கப்புறம்தான் அவரின் உடன்பிறவா தங்கச்சி. அவர் படம் ரிலீஸாகும்போதெல்லாம் பெரும்பாலும் ரெண்டு ஃபேமிலியும் சேர்ந்தே பார்போம். ஆனா, இந்த முறை படம் ரிலீஸான முதல் நாளே எங்க ஃபேமிலியோடு மட்டும்தான் பார்த்தோம். படம் செமையா இருந்துச்சு. சீக்கிரமே அண்ணா ஃபேமிலியுடன் சேர்ந்தும் ஒருமுறை பார்ப்பம்” எனப் புன்னகைக்கிறார் ப்ரீத்தி.