கொரோனா வைரஸ்ஸுக்கு மருந்தை கண்டு பிடிங்க இவ்வளவு பணத்தை தருகிறேன். ஜாக்கி சான் உருக்கமான அறிவிப்பு.

0
11536
corona
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது என்று ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் 35,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிற நாடுகள் சீனாவுடன் கொண்ட போக்குவரத்து தொடர்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for jackie chan coronavirus

- Advertisement -

மேலும், உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்து உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 915 பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். அதோடு இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மென்மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவசர அவசரமாக ஆயிரம் படுக்கைகளுடன் 2 தற்காலிகமாக மருத்துவமனைகளையும் உருவாக்கியுள்ளது.

இதையும் பாருங்க : நண்பர்களுக்கு போன் செய்ய சொல்லி பிராங்க் செய்துள்ள விஜய். இந்த வீடீயோவை பாருங்க.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிஜான் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்து உள்ளார். நடிகர் ஜாக்கிஜான் அவர்கள் பிரபல செய்தியில் கூறியது, இந்த கொடூரமான வைரசை தோற்கடிக்க விஞ்ஞானம் தொழில்நுட்பம் மிகவும் முக்கியம் என்று பலரும் விஞ்ஞானத்தை நம்புகின்றனர். அதனால் வைரசை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் விரைவில் ஒரு மாற்று மருந்து உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஒரு தனி நபரோ அல்லது ஒரு அமைப்பை சேர்ந்தவர்களோ இந்த கரோனா வைரசுக்கு மாற்று மருந்து கண்டு பிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பேன்.

Image result for jackie chan coronavirus

இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு போராடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் சீக்கிரம் குணமடையவும், யாரும் இதனால் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் தான் இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளேன் என்று கூறியிருந்தார். ஜாக்கிஜான் அறிவித்த பரிசுத்தொகை கேட்டு அசந்து போயுள்ளனர் மக்கள். இதனால் நடிகர் ஜாக்கிஜானை அனைவ்ரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

Advertisement