‘இது அது இல்ல’ – உலக தர ஆக்ஷன் காட்சின்னு சொல்லிட்டு ஜாக்கி சான் படத்தில் இருந்து சுட்டுள்ள வினோத் – இத நீங்களே பாருங்க.

0
764
jackiechan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில தினங்களுக்கு முன் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார்.

- Advertisement -

வசூல் சாதனை படைத்து வரும் வலிமை :

இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஜித்துக்கு அடுத்து வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். இந்த படம் வெளியாகி பல வசூல் சாதனைகளை குவித்து வருகிறறது.

வலிமை படம் சந்திக்கும் விமர்சனங்கள் :

என்னதான் படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் சிலர் வலிமை படத்தை குறித்து நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும்,வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் தான் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அதே போல இந்த படத்தை பல படங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர். தமிழில் வெளியான வால்டர் வெற்றிவேல், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களுடன் இந்த படத்தை ஒப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

ஜாக்கி சான் பட காட்சி :

மேலும், இந்த படத்தில் வரும் காட்சிகளை பட படங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஜாக்கி சான் நடிப்பில் கடந்த 2004 ஆண்டு வெளியான ‘new Police story’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் காட்சியை பார்த்து வினோத் அப்படியே காப்பி அடித்து இருகிறார் என்று கேலி செய்து வருகின்றனர்.

மெட்ரோ படத்தின் காப்பியா :

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ படத்தின் தழுவல் தான் வலிமை என்று பலர் கூறி வந்தனர். இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை போட்ட மெட்ரோ படத்தின் இயக்குனர் ‘வலிமை படத்தின் முதல் காட்சியிலிருந்து ஒப்பிட்டு பார்வையுடன் கூடிய தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.இது மிக சிறிய இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருக்கலாம். அல்லது தற்செயலாக நடந்து இருக்கலாம். வலிமை படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதன் மூலம் தமிழ் சினிமா புத்துயிர் பெற்றுள்ளது. ஒரு ரசிகனாக அஜித் சாரின் அடுத்த படத்துக்காக தவிப்புடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

Advertisement