நான் நல்லவன் சாது எல்லாம் இல்ல, திடீல்னு பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணிடுவேன் – ப்ளூ சட்டைக்கு ஜாபர் எச்சரிக்கை.

0
632
jaffer
- Advertisement -

தன்னை குவாட்டர், லில்லி புட் என்று கேலி செய்த ப்ளூ சட்டைக்கு ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.

- Advertisement -

ப்ளூ சட்டையும் உருவக் கேலிகளும் :

அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து மட்டுமல்லாது அஜித்தின் உருவத்தை கேலி செய்து தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இருந்தும் தனது பாணியை மாற்றாமல் இருந்து வரும் மாறன் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ள ஜாபரை உருவக் கேலி செய்து இருக்கிறார்.

ஜாபர் உருவத்தை கேலி செய்த ப்ளூ சட்டை :

ஜாபர் குறித்து பேசி இருக்கும் அவர் ‘ஹீரோ ஒரு பெரிய டானாக மாறி வருகிறார் என்றதும் அவரை கொல்ல ஒரு பெரிய பீசை ரெடி செய்கிறார்கள். அது யார் என்றால் விக்ரம் படத்தில் குட்டியாக லில்லி புட்டு போல மினி வாட்டர் போல வருவாரே அவரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து ஹீரோவை கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.’ என்று படு மோசமாக ஜாபரின் உருவத்தை கேலி செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாபர் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுத்துள்ள ஜாபர் ‘இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜாபர் ப்ளூ சட்டை மாறனின் உருவ கேலி விமர்சனம் குறித்து பேசுகையில் என்னுடைய நண்பர்கள் தான் அந்த வீடியோவை எனக்கு காண்பித்தார்கள். அவர் பேசிய விஷயம் என்னை பாதிக்கவில்லை என்றாலும் என்னை தேர்ந்தெடுத்த இயக்குனர்களை நிச்சயம் பாதிக்கும். வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா என்ன என்ற விஷயத்தை உடைத்து என்னுடைய இயக்குனர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்கள்.

இவர் எப்படி பேசிக்கொண்டு இருந்தால் என்னைப் போன்ற இருப்பவர்கள் தான் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். நான் நடிகர் எனக்கு ஒரு புகழ் கிடைத்திருக்கிறது அதனால் எனக்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் வரும். அதனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால், என்னை போன்ற பிரபலம் இல்லாதவர்கள் இருக்கும் நபர்கள் இவ்வாறான விமர்சனங்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் அதனை எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணிடுவேன் :

இன்னொரு முறை என்னை அப்படி பேசினால் நான் நல்லவன் சாது எல்லாம் கிடையாது திடீரென்று பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணி விடுவேன். மேலும் நான் அவருக்கு சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்றுதான் நான் குவாட்டர் தான். ஆனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்.எனக்கும் காதலி இருக்கிறாள் என்னுடைய நண்பர்கள் என்னை ரசிக்கிறார்கள் என்னை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டுகிறார்கள் என்னை விமர்சனம் செய்வதற்கு முன்னால் உங்களை முதலில் கண்ணாடியில் பாருங்கள் என்று ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஜாபர்’

Advertisement