வரலாற்றிலேயே முதன் முறையாக 5 துணை முதல்வர்கள்.! அசத்தும் ஆந்திர முதல்வர்.!

0
1011
Jagan-Mohan-Reddy
- Advertisement -

ஆந்திராவின் தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

-விளம்பரம்-
ஜெகன் மோகன் ரெட்டி

இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி 151 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 30ஆம் தேதி பதவியேற்றார். வெற்றி பெற்ற அடுத்த நொடி முதல் பல அதிரடி அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

இதையும் படியுங்க : மின்சார கண்ணா பட நடிகையா இது.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சுழற்சி முறை அடிப்படையில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. அணைத்து சமூக தரப்பினரும் துணை முதல்வராக சுழற்சி முறையில் நியமிக்கபட உள்ளனர். மேலும், இந்த துணை முதல்வர் பட்டியலில்  பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவரும் இதில் அடங்குவார்கள் என்று அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதையடுத்து துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 24 பேர் இன்று (ஜூன் 8) காலை பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்றதும் பூரண மதுவிலக்கை அறிவித்து அனைவரது பாராட்டினையும் பெற்றார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடி அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for Jagan-Mohan-Reddy

ஏற்கனவே பூரண மதுவிலக்கை அமுல்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி,  பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நாட்களுக்காக வாரம் (No Bag day )ஒரு நாள் முழுவதும் ஸ்கூல் புத்தகங்கள், பைகள் எடுத்து வராமல் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டை பள்ளியில் விளையாடலாம் என்று அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களையும் கவர்ந்தார்.

மேலும், சமீபத்தில் விமான நிலையதில் இருந்து வெளியில் வந்த போது இளைஞர்கள் கோரிக்கை பதாகைகளுடன் நிற்பதை கண்டு காரை நிறுத்த சொன்னார்.நீரஜ் குமார் என்ற ஏழை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவை என்று சொன்ன போது உடனடியாக ஜெகன் மோகன் ரெட்டி அரசின் சார்பில்  20 லட்ச ரூபாய் நிதியுதவி  செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement