கலைஞர் விழாவில் தமிழை பத்தி தப்பா பேசிட்டாரு அஜித், அத கேட்டதுக்கு என் வீட்டுக்கு வந்து அடிச்சி ஒடச்சிட்டாங்க – பிரபலம் கொடுத்த ஷாக்.

0
821
Ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக என்றென்றும் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இந்த அமைத்து உள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனிகபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

கலைஞர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. மேலும், வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பல ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சியிலும் காண்பது என்பது மிகவும் அறிது. ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற விழா அமைக்கப்பட்டு அதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

நிகழ்ச்சியில் அஜித் பேசியது:

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஜித், இது போன்ற அரசியல் விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஐயா, எங்களை நடிக்க விடுங்க அரசியலையும், சினமாவையும் ஒண்ணாக்க பாக்கிறாங்க. இதற்கு ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா என்று மேடையில் தைரியமாக பேசி கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். அவரின் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். மேலும், அஜித்தின் இந்த ஆதங்கமான பேச்சிக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. மேலும், நடிகர் அஜித் கலைஞர் வீட்டிற்கு சென்றிருந்த போது அஜித்தை தட்டி கொடுத்து அவரது தைரியத்தையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாகுவார் தங்கம் அளித்த பேட்டி:

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்துக்கும், அஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கலைஞருக்காக ஒரு பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கும்போது தமிழைப்பற்றி அஜித் ஒரு மாதிரியாக பேசிவிட்டார். அதை நான் எதிர்த்து கேட்டேன். அதனால் அவரை சார்ந்தவர்கள் எங்கள் வீட்டை வந்து அடித்து நொறுக்கி விட்டார்கள். அதனால் நானும் கோபப்பட்டேன். பின் நியூஸ் பேப்பர், மீடியா என்று பெரிய பிரச்சனையாகி விட்டது. அதற்கு பிறகு அஜித் அவர்களே வந்து நடிகர் சங்கத்திடம் சொல்லி எனக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

நஷ்டயீடு தருவதாக கூறியுள்ள அஜித் :

இது தெரியாமல் நடந்தது. நம்ம எல்லோரும் நண்பர்கள் தானே என்று சொன்னார். உடனே நானும் தெரியாமல் நடந்தது தானே என்று ஓகே சார் என்று சொல்லிவிட்டேன். அவர் நஷ்டயீடு தருகிறேன். என்ன வேண்டும்? என்று கேட்டார். நான் அதெல்லாம் வேணாம் சார் என்று சொல்லி விட்டேன். நான் பேசியதை வேற மாதிரி புரிந்து கொண்டார்கள் என்று அஜித் சொன்னார். அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சமரசமாக போய் விட்டோம் என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜாகுவார் தங்கம் நடித்த படங்கள்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான சண்டை பயிற்சியாளராக திகழ்ந்தவர் ஜாகுவார் தங்கம். இவரின் உண்மையான பெயர் தங்கப்பழம். இவர் அனைத்து பிராந்திய மொழிகளிலும் பணிபுரிந்து இருக்கிறார். ஆனால், இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் பணியாற்றி இருக்கிறார். இவர் தன்னுடைய 6 வயதில் சிலம்பத்தை முறையாகக் கற்றவர். இவர் இதுவரை கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சண்டைப் பயிற்சியை தாண்டி ஒரு திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக கொண்டு விளங்குகிறார். அதுமட்டுமில்லாமல் 27 தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் இவர் என்று சொல்லலாம்.

Advertisement