‘அப்போ விஜய் சினிமாவுல இல்லடா, ஒழுங்கா நடி’- சுப்புரமணியபுரம் பட அனுபவத்தை பகிர்ந்த ஜெய்

0
98
- Advertisement -

சுப்புரமணியபுரம் படம் குறித்து நடிகர் ஜெய் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய். இவர் விஜயின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பகவதி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இடையில் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இருந்தாலும் சமீப காலமாக இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் வீரபாண்டியபுரம். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வெளியாகி இருந்த படம் வீரபாண்டியபுரம். இந்த படத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெய் நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக நடிகர் ஜெய் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் பிரேக்கிங் நியூஸ், குற்றம் குற்றமே, காபி வித் காதல், எண்ணித் துணிக, காக்கி உட்பட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பார்ட்டி. இந்த படம் கூடிய விரைவில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

பட்டாம்பூச்சி படம்:

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டாம்பூச்சி. இந்த படத்தை பத்ரி இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இவர் ஒரு சைக்கோ கொலைகாரன் ஆக நடித்திருக்கிறார். இதில் சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குஷ்பு தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி, ஹனிரோஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜெய் அளித்த பேட்டி:

மேலும், இந்த படத்தில் ஜெய் ஒரு கொலையாளி ஆகவும், சுந்தர் சி அவரை பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஜெய் மற்றும் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஜெய் அவர்கள் தனியார் ரேடியோ சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல்வேறு விஷயங்களை பேசி இருக்கிறார்.

விஜய் குறித்து ஜெய் சொன்னது:

அதில் அவர், சுப்பிரமணியம் படத்தில் நடிக்கும்போது எனக்கு இயல்பாகவே நடிகர் விஜய்யின் மேனரிசம் நிறைய வரும். அப்போதெல்லாம் சசிகுமார், டேய் நாம 80களின் கதையை படமாக செய்கிறோம். அப்போலாம் விஜயே சினிமாவில் இல்லை. நீ ஏன் அதையே பண்ணிட்டு இருக்க என அடிக்கடி திட்டுவார். பகவதி படத்தில் ஒரு 10 நாட்கள் விஜய் உடன் பயணித்ததால் அந்த சைகை எனக்கும் வந்துவிட்டதா? என தெரியவில்லை என்று கூறுகிறார்.

Advertisement