இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது. இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது.
அந்த வகையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் மற்றும் சூர்யாவிற்கு காடுவெட்டி குரு மகன் கனலரசன் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ராஜகண்ணு சிறையில் அடித்துக்கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட காவலரின் பெயர் அந்தோணி ராஜ். அந்தோணி ராஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள போலீஸ்காரருக்கு திரைப்படத்தில் குருமூர்த்தி. அத்துடன் படத்தில் அவருடைய வீட்டில் அவர் அமர்ந்திருக்கும் போது அவருக்குப் பின்னால் நாள்காட்டியில் வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசம் இடம்பெற்றிருந்தது. அப்படி என்றால் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை குறிக்கும் வகையில் இது எடுக்கப்பட்டதா? என்று ஒரு கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் இந்த படத்தையும், நடிகர் சூர்யாவையும் மிக வன்மையாகக் கண்டித்து இருந்தார். அதோடு 3 கோடி வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படை என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் கனலரசன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, நடிகர் சூர்யா படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி நடித்திருக்கிறார். இது அவரது ரசிகர்கள் அவரை மதிக்காத சூழலை உருவாக்கும்.
ஜெய் பீம் படம் ஒரு நல்ல திரைப்படம் தான். ஆனால், அதில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியது தான் தவறான செயல். அந்தோணிசாமி கேரக்டருக்கும் ஏன் குருமூர்த்தி? என்ற பெயர் சூட்டி உள்ளீர்கள் என்பது தான் எங்களுடைய கேள்வி. மொத்தத்தில் இரண்டு ஜாதிகளும் இடையே பகை உருவாக்கும் முயற்சியா? முன்பு போல் நாங்கள் ஜாதி சண்டையெல்லாம் போட மாட்டோம். சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்போம். படத்தில் சூர்யா ஒரு வெறும் நடிகர் மட்டும் தான். அதனால் எல்லா தவறையும் அவர் மீது சொல்ல முடியாது. இதற்கெல்லாம் முழு பொறுப்பு படத்தின் இயக்குனர் ஞானவேல் தான். சூர்யா நிஜ வாழ்க்கையில் நிறைய நல்லது செய்கிறார். நிறைய பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவரை நான் மனிதனாக மதிக்கிறேன்.
இதையெல்லாம் நான் சூர்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எடுக்கப்பட்ட படங்களில் நடிப்பது தேவையா? இதனால் அவருடைய மரியாதை தான் குறையும். மேலும், இதையெல்லாம் சூர்யா சிந்தித்து செயல்பட வேண்டும். இனிமேல் அவர் தனது தவறை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன். இல்லையென்றால் அவருடைய ரசிகர்களே அவரை மன்னிக்க மாட்டார்கள். நான் முழுக்க முழுக்க அந்த படத்தின் இயக்குனர் ஞானவேலை தான் குற்றம் சாட்டுகிறேன். இதுபோன்ற செயல்களை எல்லா நேரங்களிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது இது நீடித்தால் ஒரு கட்டத்தில் நாங்கள் பொங்கி போய் அவரை வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலைமைக்கு செய்துவிடுவோம் என்று எச்சரித்துள்ளார். இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.