தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் மணிகண்டன். இவர் ரேடியோ ஜாக்கியாக மீடியாவுக்குள் நுழைந்தார். பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் மிமிக்ரி கலைஞனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். மேலும், இவருக்கு சினிமாவில் டப்பிங் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். பின் ஆரம்பத்தில் இவர் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியனார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக இயக்குனர் நலன் குமாரசாமியின் அறிமுகம் மணிகண்டனுக்கு கிடைத்தது. அதன் மூலம் மணிகண்டனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் படங்களில் நடித்தார். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு மக்களின் கவனம் இவர் மீது ஜெய் பீம் படத்தின் மூலம் திரும்பியது. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால், எந்த அளவிற்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ படம் அளவு சர்ச்சைகளில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் பீம் படம் ராஜ்கண்ணு:
மேலும், இந்த படத்தில் மணிகண்டன், ராஜகண்ணாவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு மணிகண்டன் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மணிகண்டன் நடித்து உள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன், ரித்விகா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
சில நேரங்களில் சில மனிதர்கள் படம்:
இந்த படம் சமீபத்தில் தான் திரையில் வெளியானது. மாறுபட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வந்தார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமலஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மணிகண்டன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ராஜ்கமல் புரொடக்ஷனில் இருந்து எங்களுக்கு ஃபோன் பண்ணினார்கள். கமல் சார் பார்க்க விரும்புவதாக சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் நாங்களும் போய் பார்த்தோம்.
மணிகண்டன் அளித்த பேட்டி :
இதுக்கு முன்னால் ஜெய் பீம் படம் ரிலீசுக்கு பிறகு கமல் சார் கூப்பிட்டு பாராட்டினார். பிறகு சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் முழு யூனிட்டையும் கமல் சார் அழைத்து பாராட்டி இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருந்தது. பின் அவர் எத்தனை நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டீர்கள் என்று கேட்டார்? நாங்கள் 35 நாளில் முடித்துவிட்டோம் என்று சொன்னதை கேட்டு கமல் சார் சந்தோஷப்பட்டார். அவர் பாராட்டியதை விட பெரிய சந்தோஷம் எனக்கு எதுவுமே இல்லை. கமல் சாருடைய தூங்காவனம், விஸ்வரூபம் படத்தில் கூட்டத்தில் நிக்கிற ஆளாக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்திருந்தேன்.
கமல் பற்றி மணிகண்டன் சொன்னது:
அப்படிப்பட்ட எனக்கு அவரை கூப்பிட்டு பாராட்டியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். இப்படி மணிகண்டன் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து மணிகண்டன் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கமல் சார் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.