ஜெயிலர் படத்தில் பூனை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆனந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் படம்:
இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். இதுவரை இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள்.
ஆனந்த் அளித்த பேட்டி :
அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் கேங்ஸ்டர் கும்பலில் பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் அந்த பிரபலத்தினால்தான் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் முதன்முதலாக நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் யோகி பாபுவை கிண்டல் செய்யும் சிறுவன் கதாபத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து சமீபத்தில் நடிகர் ஆனந்த் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.
ஆனந்த் அளித்த பேட்டி:
அதில் அவர் கூறியிருப்பது. முதன் முதலில் நெல்சன் அண்ணா தான் எனக்கு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு இப்போது தான் நான் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறேன். அதுவும் நெல்சன் அண்ணா தான் உனக்காகவே இந்த பூனை கதாபாத்திரத்தை எழுதி இருக்கிறேன். நீதான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க வந்தேன். மிகப்பெரிய நடிகர்களுடன் இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன் நினைத்தால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.