நெல்சன் ரிஜெக்ட் பண்ணிட்டாரு,ஆனா தலைவரு என்ன உலகமே திரும்பி பார்க்க வச்சிட்டாரு – ஜெயிலர் துணை நடிகர் நெகிழ்ச்சி.

0
1246
- Advertisement -

ஜெயிலர் படத்தில் நடிக்க வந்த நபரை நெல்சன் ஒதுக்கி ரஜினி கட்டியணைத்து அரவணைத்து இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக ரஜினி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.
படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார்.

ஜெயிலர் பட வில்லன்:

அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள். இதனால் அந்த கும்பலை பழிவாங்க ரஜினி கிளம்புகிறார். இறுதியில் என்ன ஆனது? ரஜினி தன் மகனை கொலை செய்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்தாரா? பலி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

-விளம்பரம்-

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது ஆடியோ லான்ச் விழாவில் நெல்சன், ஜெயிலர் திரைப்படத்தில் ஒருவரை நாங்கள் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தோம். அவர் ரொம்ப டேக் வாங்கினார்.

ரஜினியின் தங்க குணம் :

படத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று சொல்லிவிட்டு நான் கிளம்பி விட்டேன். அடுத்த நாள் ரஜினி என்னுடைய உதவி இயக்குனர் ஒருவரிடம், என்னதான் இருந்தாலும் அந்த நபர் அவருடைய வீட்டில் நான் ரஜினி படத்தில் நடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருப்பார். அவரின் ஆசையும் அவர்கள் வீட்டில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றம் அடைந்து விடும். அதனால் அந்த நபர் மீது நான் கை போட்டு நின்று கொள்கிறேன் என்று ரஜினி சொல்லி இருக்கிறார். இதை அப்படியே உதவி இயக்குனர் என்னிடம் சொன்னார். இதை கேட்கும்போது எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் அந்த துணை நடிகரே அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement