அப்படி ஆடை போட்றதுக்கு அப்படியே போலாமே,பொம்பள பொம்பள தான் – பேரரசு ஆவேசம்

0
1866
- Advertisement -

பெண்களின் அறைகுறை ஆடை குறித்து இயக்குனர் பேரரசு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தான் காரணம் என்று பலரும் கூறியிருப்பது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் சினிமா பிரபலங்கள் அணிந்து வரும் ஆடைகள் தான் பல பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது என்று எல்லாம் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் பெண்களின் அரைகுறை ஆடைகளை குறித்து இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், சினிமாவில் வரும் பாடல் வரிகள் கொச்சையாக பார்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏன் மிகப்பெரிய கவிஞனான கண்ணதாசன் செக்க சிவந்த பழம் என்ற பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் தற்போது பார்த்தால் கூட கொச்சையாக இருக்காது.

- Advertisement -

பேரரசு அளித்த பேட்டி:

அதேபோல் நான் இயக்கிய சிவகாசி திரைப்படத்தில் கதாநாயகி அசின் தொப்புள், தொடை தெரிவது போல ஆடை அணிந்திருப்பார். அதற்கு விஜய் அவர்கள், பெண்களை பார்த்தால் ஆண்கள் சபலப்பட தான் செய்வார்கள். அதுவும் இந்த மாதிரி ஆடைகளை அணிந்து வந்தால், சபலமாக தான் நினைப்பார்கள் என்றெல்லாம் அட்வைஸ் செய்து இருப்பார். ஒரு பெண்ணினுடைய உடல் எப்படி இருக்கும் என்பது ஆணுக்கு தெரியும். ஒரு ஆணினுடைய உடல் எப்படி இருக்கும் என்பது பெண்ணுக்கு தெரியும்.

ஆண்-பெண் குறித்து சொன்னது:

இப்படி இருக்கும் போது ஏன் ஆடை அணிய வேண்டும்? அம்மணமாகவே அவர்கள் செல்ல வேண்டியது தானே? ஒரு பெண் மேக்கப் செய்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறார். அது நான்கு பேர் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி அலங்கரித்துக் கொள்கிறார். நான்கு பேரு பார்ப்பார்கள் என்பதற்காக மேக்கப் செய்கிறார் என்றால் நான்கு பேர் தன்னுடைய ஆடையை பார்த்து சபலம் அடைவார்கள் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்? அதை கவனத்தில் கொண்டு உடைகளை அணிந்து கொள்ளலாம் அல்லவா? ஒரு பெண்ணை ஒரு ஆண் பார்க்கும் போது அவனுக்கு உணர்ச்சிகள் தூண்டப்படுவது இயற்கையான விஷயம்.

-விளம்பரம்-

பெண்கள் ஆடை குறித்து சொன்னது:

அதை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும். என்னைக்குமே ஆண் ஆண் தான், பெண் பெண் தான். அதே போல் ஆண்களை இந்த விஷயத்தில் சரியாக வளர்க்க வேண்டும். ஆண்களின் பார்வையை சரி செய்ய வேண்டும் என்று கூறுவதெல்லாம் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். என்னை பொறுத்தவரை பெண்களின் மீது உள்ள அக்கறையால் தான் இப்படி சொல்கிறேன். இப்போது இருக்கக்கூடிய ஆண்கள் எல்லாம் அப்பா அம்மா பேச்சைக் கேட்டு நடக்கிறார்களா? ஒரே வயிற்றில் பிறந்த குழந்தைகளிலே ஒன்று தியாகியாகவும், இன்னொன்று துரோகியாகவும் இருக்கிறது.

perarasu

ஆண்கள் குறித்து சொன்னது:

அப்படி இருக்கும்போது நாட்டில் உள்ள ஆண்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எல்லோரும் பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா? காட்டில் முட்கள், கற்கள் எல்லாமே இருக்கும். ஆனால், காட்டில் ஏன் முற்கலை போடுகிறீர்கள் என்று கேட்பது வீம்பு. ஆண்கள் போல பெண்கள் அதிகாரத்திற்கு வர உரிமை இருக்கிறது. அதே போல் ஆண்கள் போல அவர்களும் எல்லா வேலையும் செய்யலாம். ஆனால், ஆண்களாகவே அவர்கள் மாற வேண்டும் என்பது சரியானது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement