‘வா தலைவா வா தலைவா’ – ரகுமானை தொடர்ந்து STR போட்ட தமிழ் ட்வீட்டை கண்டு சிலிர்க்கும் ரசிகர்கள். (அமித் ஷாவிற்கு பதிலடியா)

0
459
- Advertisement -

ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் குறித்து போட்டுள்ள பதிவு பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-180-743x1024.jpg

சமீபத்தில் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாகவும் னைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொதுமொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ரகுமானின் தமிழணங்கு பதிவு :

அதே போல தமிழ் சினிமாவில் இருக்கும் பல பரபலங்கள் அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அதே போல சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மானிடம், பத்ரியாகையாளர் ஒருவர் இந்தி தான் இனைப்பு மொழி என்று அமித் ஷா கூறி இருக்கிறாரா என்று கேட்டாதற்கு ‘தமிழ் தான் இணைப்பு மொழி ‘ என்று கூறிவிட்டு சென்றார்.

பிரகாஷ் ராஜ் கண்டனம் :

ஏ ஆர் ரஹ்மானை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜும் இந்த விவாகரத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள், பன்முகத்தன்மையை நாங்கள் நேசிக்கிறோம். எங்கள் தாய்மொழியை நேசிக்கிறோம். நாங்கள் என்ன மொழி பேச வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? உங்கள் அஜென்டா என்ன? என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

சிம்புவின் ‘தமிழால் இணைவோம்’ ட்வீட் :

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு ‘தமிழால் இணைவோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதே போல அனிருத்தும் ‘தமிழால் இணைவோம்’ என்று ட்வீட் செய்து இருக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தே சிம்பு, அனிருத் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் ‘தமிழால் இணைவோம்’ என பதிவிட்டுள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் கண்டனம் :

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மக்கள் மறக்கடிப்பதற்காக இது போல் ஹிந்தி மொழி பிரச்சினையை மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement