10 ஆம் வகுப்பில் என் ஜாதி சான்றிதழலில் என் பெயருக்கு பின் Indian, Christian,பின் – ஜாதி குறித்து படு ஓப்பனாக ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

0
723
James
- Advertisement -

எப்படியெல்லாம் ஒருவரின் சாதியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதை சாதி என்கிற கருமம் என்ற தலைப்பின்கீழ் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறறது. இதுகுறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ‘ சாதி என்கிற கருமம், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வந்தபிறகு பள்ளியில் போய் என் சான்றிதழ்களை வாங்கச் சென்றேன். வாங்கி அதைப் பார்த்துக்கொண்டே வரும்போது ஒரு ஆவணத்தில் என் பெயர், பிறகு Indian, Christian – xxxxxx என்று போட்டிருந்தது.

-விளம்பரம்-
james-Vasanthan

எல்லாம் புரிந்தது, அது மட்டும் என்னவென்று புரியவில்லை. ஒன்றும் மண்டைக் குடைச்சலெல்லாம் இல்லை. ஏதோவென்று விட்டுவிட்டேன். வீட்டில் அம்மாவிடம் அந்தச் சான்றிதழ்களைக் காட்டும்போது இது நினைவுக்கு வந்ததால் அதைக்காட்டி என்னவென்று கேட்டேன். என்ன சொன்னார்களென்று நினைவில்லை. ஆனால் என் அறிவுக்கு எட்டவில்லை போல, அது மனதில் பதியவில்லை.

- Advertisement -

சுமார் 32 வயது இருக்கும். திருநெல்வேலிக்கு இசை நிகழ்ச்சிக்காகப் போயிருந்தேன். அடிக்கடிப் போய்வருவேன். ஏராளமான இசைத்துறை நண்பர்கள் அங்குண்டு எனக்கு. ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களோடு சிரிப்பும் அரட்டையுமாக இருந்தபோது ‘இந்த வார்த்தை’ அவர்களால் பயன்படுத்தப்பட்டது. என் காதுகள் நீண்டன. கவனித்தேன், அவர்கள் உரையாடலை. அது ஒரு சாதிப்பெயர் என்பதை ஊகித்துக் கொண்டேன்.

சுமார் 40 வயது இருக்கும். கடவுச்ச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பும்போது என் தாத்தா பெயரை எழுதும்போது அவர்கள் பயன்படுத்திய ‘இன்னொரு சொல்’ என் தாத்தாவின் பெயரில் இருந்தது. எனக்கு வியப்பு! இன்னும் கொஞ்ச காலம் கழித்து அந்தப் பிரிவுக்கு இருவேறு பெயர்கள் உள்ளன என்பதை விளங்கிக்கொண்டேன். கடந்த வருடம் எனது ஒத்த வயதுடைய எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இதைப்பற்றி என்னிடம் நேரடியாகவேப் பேச நேர்ந்தது.

-விளம்பரம்-

அவர் ஒரு தமிழ் பிராமணர். அவரது தொழில் அனுபவம், வாழ்க்கை அனுபவம், ஊடக அனுபவம், அடிப்படை குயுக்தி, கெட்டிக்காரத்தனம், நட்பாய் பழகும் சுபாவம் என பலங்கள் அதிகம் நிறைந்தவர்.ஒரு தொலைபேசி உரையாடலில் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் திடீரென என்னிடம் “நீங்கள் xxxxxxx தான?” என்றார். எனக்கு பயங்கர வியப்பு. அவர் அறிவாளி என்பது தெரியும். இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம்தான். நான் சுழியமாக இருக்கும் ஒரு விஷயத்தில் அவர் முனைவர் என்பதை அறிந்து அசந்துவிட்டேன்!

“என்ன யோசிக்கிறிங்க? சரிதான?” என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“எப்படிச் சொன்னிங்க?” என்று அதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினேன்.

இதெல்லாம் ஜுஜுப் என்பது போல பதிலே சொல்லாமல் பலமாகச் சிரித்தார்.

இந்தக் கருமமெல்லாம் தெரியாமலே போய்த்தொலைக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் பெற்றோருக்கு நன்றி சொல்கிறேன்

Advertisement