90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.
மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜேம்ஸ் வசந்தன் குடும்ப படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதோடு அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஜேம்ஸ் வசந்தனுக்கு இவ்வளவு பெரிய மகனா?? என்றும் வியந்து போய் உள்ளார்கள்.
ஜேம்ஸ் வசந்தன் விஜய் டிவியின் ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானதை விட முகநூல் பக்க பதிவுகள் மூலம் தான் அதிக பிரபலமானார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.
சமீப காலமாக இவரை எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை. இறுதியாக Chess Olypiad விழாவில் தொகுப்பளராக பணியாற்றி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது தாயின் புகைப்படத்தை முதன் முறையாக பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘என் அம்மாவின் படம் ஒன்று கூட இல்லை என்னிடம். நேற்று அவரின் பழைய நிழற்படம் (கண்ணாடி அணிந்தவர்) ஒன்று கிடைத்தது. அக்கா அனுப்பினார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.