தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குப்பின் விஜய் தன்னுடைய கட்சி சார்பில் 234 தொகுதிகளும் நிற்கப்போகும் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் தவெக தனித்து போட்டியிடுகிறது. விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் நேற்று விஜய் அவர்கள் வேட்பு மனு தாக்குதல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.
விஜய் அரசியல்:
இந்த நிலையில் இது தொடர்பாக பாடகர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவில், "பெரம்பூர் C. Joseph Vijay", "திருச்சி கிழக்கு C. Joseph Vijay" என்று தன்னையே கொஞ்சம் நாணத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டு, ரசிகர்களை சிரம் தாழ்த்தி வணங்கும்போது, குழந்தைகள் சில சமயங்களில் தங்களுக்கு ஏற்படும் பெருமிதத்தையும், அளவுகடந்த மனமகிழ்ச்சியையும் மறைக்க முயன்று தோற்று சிரிப்பார்களே, அதை அவர் முகத்தில் பார்ர்க்க முடிந்தது. நன்றாகத்தான் இருந்தது. ஆனால், விஷயம் அதுவல்ல.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
அரசியலில் அடுத்த மட்டத்தைக்கூட புரிந்துகொள்ளாத ஒருவர் என்பதைத்தான் அது காட்டியது. அரசியலின் ஆழத்தைப் பற்றியெல்லாம் பேசவில்லை; தனக்குத் தொடர்பில்லாத இன்னொரு துறையைப் பற்றிய அடிப்படைப் புரிதல் ஒரு சராசரி மனிதனுக்கென்று ஒன்று இருக்குமல்லவார்? அதுகூட தனக்கு இல்லையென்பதை வெளிப்படுத்திய உடல்மொழிதான் அது.
விஜய் பற்றிய விமர்சனம்:
ஒரு பெரிய கட்சியில் காலங்காலமாக உழைத்து என்றாவது ஒருநாள் தனக்கு ஒரு வேட்பாளர் வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று ஏங்கிய ஒருவனுக்குக் கிடைத்த ஒரு உண்மையான அரசியல்வாதியின் மகிழ்ச்சிக்கும், உடல்மொழிக்கும் தொடர்பே இல்லாத ஒரு வெளிநபரின் வெள்ளந்தியான அறியாமையைத்தான் என்னால் பார்க்கமுடிந்தது. அறிவுக்குருடர் கூட்டம் கெட்டவார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு திட்டலாம். உங்களுக்குத் தெரிந்த அந்த ஒன்றையும் தடுத்துவிட்டால் பாவம்! வேறு என்ன செய்வீர்கள்?






