‘அடுத்தவனை கீழே தள்ளிவிடுவது தான் பிஆர் டீமின் வேலை’ – முத்துக்குமரனுக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கும் விஷயம்

0
101
- Advertisement -

பிக் பாஸ் 8 போட்டியாளர் முத்துக்குமரனுக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 868 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, ரவீந்தர் தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் 8 ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், அன்ஷிதா, கானா ஜெஃப்ரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கிற்காக கடுமையான போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முத்துக்குமரன் தான் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் வரும் நிலையில், அவரது இமேஜை கெடுக்கும் வகையில் சௌந்தர்யா மற்றும் ராணுவ்வின் பிஆர் டீம் செய்து வருவதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது கூறியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்:

அதில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு நன்றாக விளையாடி மக்களை ஈர்த்து வெற்றி பெறுவது எல்லாம் கிடையவே கிடையாது. பிஆர் டீமை வைத்துக்கொண்டு தினமும் ஒரு போட்டியாளரை மையப்படுத்தி அவர்கள் செய்யும் விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவருக்கு ஓட்டுகளை அதிகரிக்கச் செய்வது வருகிறார்கள். வன்மம் நிறைந்த இந்த உலகில் அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு மேலே வர வைப்பது தான் பிஆர் டீமின் வேலையாக இருக்கிறது.

-விளம்பரம்-

சௌந்தர்யா மற்றும் ராணுவ் குறித்து:

இதைத்தான் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் சௌந்தர்யா சிரிக்கிறது அழகு. அவர் உட்கார்ந்து இருப்பது சூப்பராக இருக்கிறது என ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பிம்பத்தை உருவாக்கி வந்த அவரது பிஆர் டீம் தற்போது முத்துக்குமரனுக்கு எதிரான வேலையை செய்து வருகின்றனர். அதேபோல ராணுவ்வின் பிஆர் டீம், அவர் ரொம்ப அப்பாவி என ப்ரொஜெக்ட் செய்து வருகின்றனர். இந்த இரண்டு டீம்களும் முத்துக்குமரனை டவுன் செய்ய வேண்டிய அனைத்து கீழ்த்தரமான வேலைகளிலும் இறங்கி விட்டார்கள்.

முத்து குமரனுக்கு ஆதரவாக சொன்னது:

மேலும், முதலில் முத்து நல்லவன் என்று சொல்லிக் கொண்டிருந்த மக்களை ஆமாம்பா, அவன் இப்ப எல்லாம் ஓவரா பண்றான். இதெல்லாம் பொய் தானே என சொல்ல வைக்கும் வேலையை தற்போது மற்ற போட்டியாளர்களின் பிஆர் டீம் சிறப்பாக செய்து வருகிறது என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். தற்போது முத்துவின் ஆதரவாளர்கள் ஜேம்ஸ் வசந்தனின் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில், நீங்கள் முத்துக்குமரன் பிஆர் டீம் தானே என்று ரசிகர்கள் அவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement