இந்தியாவின் முதல் டைம் லூப் படம் ‘ஜாங்கோ’ – முழு விமர்சனம் இதோ.

0
1168
- Advertisement -

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘ஜாங்கோ’. இந்த படத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சிவி குமார் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக ‘ஜாங்கோ’ வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

‘ஜாங்கோ’ திரைப்படம் தமிழிலில் வெளியான முதல் “Time loop” திரைப்படம். ‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் மீண்டும் எழுவேன் என்று அர்த்தம். பொதுவாகவே திரைப்படங்களில் பழைய காலத்திற்கு செல்வது அல்லது எதிர்காலத்தில் போவது என்று தான் இருக்கும். ஆனால், இது ஒரே நாளில் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வை மையமாக கொண்டும், காட்சிக்கு காட்சிக்கு சுவாரசியமும் எதிர்பார்ப்புகளும் மிகுந்ததாகவும் இருக்கிறது. ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நடக்கின்றவாறு இதுவரை தமிழ் ரசிகர் கண்டிராத ஒரு புதுவிதமான கதையை ஜாங்கோ இருக்கிறது.

படத்தில் மருத்துவராக கதாநாயகன் சதீஷ்குமார் நடித்திருக்கிறார். கதாநாயகி மிருணாளினி ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள். பின் ஒரு நாள் இரவில் வெளியே செல்லும் சதீஷ் இருக்கும் இடத்தில் ஒரு விண்கல்லின் கதிர்வீச்சு அவர் மீது விழுகிறது. அது முதல் நாள். அப்போது தான் முதல் டைம்லூப் ஆரம்பிக்கிறது. அதாவது Time loop காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை என்னவெல்லாம் நடைபெறுகிறதோ, அதே சம்பவம் அடுத்த நாளும் நடைபெறும்.

-விளம்பரம்-

ஆனால், கதாநாயகனுக்கு மட்டும் எல்லாம் சரியாக நினைவிருக்கிறது. தனது நினைவாற்றலை வைத்துக் கொண்டு அவர் பூமியை எப்படி காப்பாற்றுகிறார்? தன் மனைவிக்கு ஏற்படும் ஆபத்தை எப்படி கடக்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் சதீஷ்குமாரின் நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. மனைவியின் மீது இருக்கும் காதல், ஏற்படும் பிரச்சனைகளால் வரும் கோபம், ஆத்திரம், மனைவிக்காக போராடும் கணவன் என்று பல காட்சிகளில் அசத்தியிருகிறார். வழக்கம்போல் மிர்னாலினி படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தில் கருணாகரனின் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும், அடுத்து என்ன, என்ன? என்று கேட்கும் வகையிலும் சென்றிருக்கின்றது. படத்தின் ஜிப்ரானின் இசையும், ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்தது. நேரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பல படங்கள் இருந்தாலும் இந்த படம் ஒரு புதுவிதமான முயற்சியாக இருக்கிறது.

மொத்த படமே கதாநாயகன் சதீஷ்குமார் மேல்தான் பயணிக்கின்றது. ஆனால், அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். மேலும், சில காட்சிகளில் டப்பிங் சரியாக இல்லாமல் உள்ளது என்று ரசிகர்கள் சொல்லுமளவிற்கு உள்ளது. அதோடு படத்தில் சதீஷ்குமார், மிருணாளினி தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. படத்தில் ஆங்காங்கே நிறைய லாஜிக் குறைகள் இருந்தாலும் சுவாரசியங்கள் நிறைந்திருக்கிறது. இரண்டு மணி நேரம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியது வீண் ஆகவில்லை என்று சொல்லலாம்.

பிளஸ்:

டைம் லூப் என்ற கான்செப்டில் இந்தியாவில் உருவாகி இருக்கும் முதல் படம் என்று ஜாங்கோ படத்தை சொல்லலாம்.

அறிமுக இயக்குனர் இவ்வளவு பெரிய கதைக்களத்தை இயக்கி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருக்கிறது.

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மைனஸ்:

டைம் லூப் கான்செப்டை பயன்படுத்தி இருந்தாலும் கதையை இன்னும் வலுவாக இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்.

கதைக்களத்தை தெளிவாக புரியும் வகையில் இன்னும் கொஞ்சம் கொண்டு சென்றிருக்கலாம்.

படம் முழுவதும் கதாநாயகன் கதாநாயகி இருவரும் மட்டுமே பயணிக்கிறது.

மொத்தத்தில் ஜாங்கோ– ஒரு புது விதமான முயற்சி, சுமாரான திரைகதையுடன். ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement