கார்த்தியின் 25வது படம் வெற்றியை கொடுத்ததா? ‘ஜப்பான்’ படத்தின் விமர்சனம் இதோ.

0
455
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வருபவர் கார்த்தி. தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜப்பான். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அனு இமானுவேல், சுனில் வர்மா, விஜய் மில்டன், பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கிறது. மேலும், இது கார்த்தியின் 25வது படம் ஆகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஐந்தாவது முறையாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜப்பான் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

திருடன்- போலீஸ் இடையே நடக்கும் ஆட்டத்தை தான் இயக்குனர் கதையாக எடுத்திருக்கிறார். படத்தில் கோயம்புத்தூரில் ஒரு மிகப்பெரிய நகை கடை இருக்கிறது. இந்த கடையில் 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதை கண்டுபிடிக்க போலீசார் மும்முறமாக ஈடுபடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த நகை கடையில் உள்துறை அமைச்சருடைய குடும்பத்துக்கும் பங்கு இருப்பதால் போலீசுக்கு அழுத்தம் அதிகமாகவே கொடுக்கிறார்கள்.

- Advertisement -

மேலும், சுனில் வர்மா, விஜய் மில்டன் ஆகிய தலைமையிலான போலீஸ் குழுக்கள் இரண்டு பக்கமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்போது விசாரணையில் இந்த வேலையை ஜப்பான் செய்திருப்பதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் கார்த்திக்கு கதாநாயகியாக நடிக்கும் அனு மீது காதல் ஏற்படுகிறது. பின் அவரை தேடி சூட்டிங் பாட்டிற்கு கார்த்திக் சென்று கொண்டிருக்கும் போது போலீசும் சுத்தி வளைக்கிறார்கள். எப்படியோ கார்த்தி, அனு உடன் தப்பித்து விடுகிறார். அப்போது சுனில் வர்மாவிடம் கார்த்திக் டீல் பேசுகிறார்.

அவர் இந்த திருட்டை நான் பண்ணவில்லை என்று சொல்கிறார். இறுதியில் கார்த்திக் இந்த திருட்டை செய்ய காரணம் என்ன? இதை செய்ய சொன்னது யார்? கார்த்தியை சிக்க வைக்க என்ன காரணம்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி திருடனாக நடித்திருக்கிறார். படம் முழுவதையும் கார்த்தி தான் தாங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்கள் ரசிக்கும்படியாக கார்த்தி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்து படத்தில் வரும் விஜய் மில்டன், சுனில் வர்மா, ஜித்தன் ரமேஷ், கே. எஸ்.ரவிக்குமார் ஆகியோர் தங்களுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜாலியான திருடனுக்கும் ஆவேசமான போலீசுக்கும் இடையே நடக்கும் கதையை தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் படம் விறுவிறுப்பாக சென்றாலும் இடைவெளிக்கு பிறகு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இடம் விட்டு இடம் கதை செல்வதால் கொஞ்சம் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

படத்தில் நிறைய அரசியல், சினிமா, விளையாட்டு, காவல்துறை ஆகிய எல்லா ஏரியாக்களையும் காண்பித்திருப்பதால் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவரை அடுத்து ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாகத்தான் தீபாவளிக்கு ஜப்பான் படம் இருக்கிறது.

நிறை:

கார்த்தி நடிப்பு சிறப்பு

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே

முதல் பாதி நன்றாக இருக்கிறது

காமெடி, வசனங்கள் ஓகே

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

இரண்டாம் பாதி சொதப்பல்

அனுபவ நடிகர்களை திறமையாக வேலை வாங்கி இருக்கலாம்

சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் இந்த தீபாவளிக்கு ஜப்பான்- வெடிக்கவில்லை

Advertisement