கிரைம் திரில்லர் படம், அயோத்தி பட நடிகர் நடித்துள்ள ‘ஒரு நொடி’ படத்தின் விமர்சனம் இதோ

0
333
- Advertisement -

இயக்குனர் மணிவண்ணன் எழுதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஒரு நொடி. இந்த படத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், பழ. கருப்பையா, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மதுரை அலங்காநல்லூர் பகுதியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் சகுந்தலா என்ற பெண் தன்னுடைய கணவர் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுகிறார்கள். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன் ஈடுபடுகிறார். அப்போது காணாமல் போன நபரை கரிமேடு தியாகு என்பவர் கடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்கிறார் போலீஸ்.

- Advertisement -

இன்னொரு பக்கம் ஒரு இளம் பெண்ணை மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். பின் அவருடைய கொலைக்கு காரணம் என்னவென்று போலீசார் விசாரிக்கிறது. இறுதியில் காணாமல் போன நபருக்கு என்ன ஆனது? அந்த பெண்ணை கொலை செய்தது யார்? கொலைக்கும் கடலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பதை க்ரைம் பாணியில் இயக்குனர் சொல்லி இருக்கிறார். படத்தில் இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன் ரோலில் நடிகர் தமன்குமார் நடித்திருக்கிறார்.

இவர் ஹீரோவாக நடித்த முதல் படம். முதல் படத்தில் இவர் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பையும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். கரிமேடு தியாகு கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி மிரட்டி இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து படத்தில் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இரண்டு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் ஒரே கதையாக இயக்குனர் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. எடிட்டிங் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இயக்குனர் கொடுத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. முன்னணி நடிகர்கள் இல்லாதது தான் ஒரு குறை. படத்தில் சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. இருந்தாலும், கதைக்களம் அதை யோசிக்கவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கதைகளையும் ஒரே இடத்தில் இயக்குனர் சேர்த்திருப்பது சிறப்பாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறப்பான கிரைம் திரில்லர் பாணியில் இயக்குனர் படம் கொடுத்திருக்கிறார்.

நிறை:

திரைக்கதை நன்றாக இருக்கிறது

எடிட்டிங் பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பிரபலமான நடிகர்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் ஒரு நொடி – வெற்றி

Advertisement