ஜெயலலிதா தாயாக நடிப்பது இந்த தனுஷ் பட நாயகி தான். இவருக்கா இந்த நிலைமை.

0
4769
Queen

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து பின்னர் அரசியலில் நுழைந்து சிறு வயதிலேயே தமிழக முதல்வர் ஆனவர் ஜெ. ஜெயலலிதா. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமாக “குயின்” என்ற வெப் சீரிஸ் உருவாக்கி யுள்ளது. மேலும், இதன் டிரைலர் கூட சமீபத்தில் தான் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் “தலைவி” என்ற பெயரில் இயக்குனர் விஜய்யும், “த ஐயன் லேடி” என்ற தலைப்பில் பிரியதர்ஷினியியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். அதோடு த ஐயன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். மேலும், தலைவி படத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

ramya krishnan as jayalalitha க்கான பட முடிவு

- Advertisement -

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உருவாக்கி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி திரைப்பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளார்கள். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிறுவயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் “என்னை அறிந்தால், விசுவாசம்” என்ற படத்தில் அஜித்துக்கு மகள் ஆக நடித்த அனிகா நடித்து உள்ளார். இளமை பருவம் ஜெயலலிதாவாக துருவங்கள் பதினாறு படத்தின் நாயகி அஞ்சனா ஜெயபிரகாஷ் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : ஒரு ஜோக்கர், பிராடு கிட்ட தலை குனியும் மோடியின் தலையை. என்ன சித்தார்த் இப்படி சொல்லிடீங்க.

மேலும், ஜெயலலிதாவின் பள்ளிக் காலம், இளமை காலம், திரை உலகம், அரசியல் என அவருடைய ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் படமாக உருவாக்கி உள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் எம்ஜிஆர் பற்றிய பல தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ட்ரெய்லர் வெளியானது. இந்த குயின் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் தாயார், சந்தியா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
sonia agarwal in queen க்கான பட முடிவு

மேலும், அதற்கான போட்டோவும் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது இருக்கும் நியூஸில் இது தான் ட்ரெண்டிங் நியூஸ் ஆக பரவி வருகிறது. மேலும் டீசரில் ஜெயலலிதாவின் பள்ளிப்பருவம், திரை உலகம் என அனைத்து காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ரம்யா கிருஷ்ணனுக்கு சக்தி சேஷாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.ஆனால், நடிகை சோனியா அகர்வால் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னும் போது தனுசுக்கு ஜோடியாக நடித்த இவருக்கா இந்த நிலைமை என்ற எண்ணம் தோன்றுகிறது.

Advertisement