சமீபத்தில் சாமியார் நித்யானந்தாவிடம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் ஆசிர்வாதம் வாங்கி இருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் சித்தார்த் அவர்கள் இது குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். இது தற்போது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இவர் தமிழகத்தை சேர்ந்த சாமியார் என்று கூறப்படுகிறது. இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் ஆசிரமங்கள் இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருடைய கிளைகள் உள்ளன. உலக அளவில் இவருக்கு 10 மில்லியன் நபர்களுக்கு மேல் பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், நித்தியானந்தா மீதும், அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீது பல புகார்கள் எழுந்து வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் நடிகை ரஞ்சிதா— நித்யானந்தா சமாச்சாரம் கூட பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் ஒரு பெண்ணை கடத்தி வைத்து உள்ளார் என்றும், அந்தப் பெண் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார் என்ற தகவலும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் இந்திய நாட்டை விட்டு தப்பிச் சென்றார் என்றும் கூட கூறியுள்ளார்கள். இதனால் குஜராத் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறது என்ற தகவலும் உள்ளது. இவ்வளவு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கினாலும் இவருக்கு இருக்கும் பக்தி கூட்டங்கள் பெருகிக் கொண்டு தான் உள்ளது.
இதையும் பாருங்க : கமல் சார் போஸ்டரில் சாணி அடிப்பேன். தர்பார் இசை வெளியீட்டில் சர்ச்சையை கிளப்பிய நடிகர்.
இந்நிலையில் இவர் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே ஒரு தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், ‘கைலாச’ என்ற வலைத்தளத்தில் நித்தியானந்தா ஒரு தனிநாட்டை உருவாகி உள்ளார் என்றும், அதில் கொடி, சின்னம் மற்றும் அரசியலமைப்புகளையும் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அந்த வலைத்தளத்தில் கைலாச என்று அழைக்கப்படும் அந்த நாட்டில் பிரதமருடன் கூடி அமைச்சரவை கொண்டுள்ளதாகவும், இது இந்துக்களுக்கான ‘இந்து இறையாண்மை தேசம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் ஒரு அமைச்சரவையும் ஏற்படுத்தி உள்ளார் என்றவுடன் நம் இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து நித்யானந்தாவிடம் மோடி அவர்கள் ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படம் ஒன்று வெளியான உடன் மோடிக்கும், நித்யானந்தவுக்கும் தொடர்பு உள்ளது என்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.இந்நிலையில் மோடி அவர்கள் நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பிரபல நடிகர் சித்தார்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, சர்ச்சைக்கும் பிரச்சனைக்கும் உருவமாக இருக்கும் நித்யானந்தாவிடம் நாட்டின் பிரதமர் ஆசிர்வாதம் வாங்கி உள்ளார். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் இவரிடம் மோடி அவர்கள் ஆசிர்வாதம் வாங்குவதா?? அப்ப அவரையும் சோதிக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறி உள்ளார்.
எப்பவுமே நடிகர் சித்தார்த் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எவ்வளவு பெரிய சர்ச்சை விஷயமாக இருந்தாலும் அதற்கான கருத்து பதிவிட்டு வருவார். யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாமல் தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூறும் மனிதர். இந்த மாதிரி பெண்களை ஏமாற்றும் பேர்வழி இடம் நம் நாட்டின் பிரதமர் தலை குனிவது நாட்டையே தலை குனிய வைத்தது போல இருக்கிறது என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.