ஜெயலலிதாவாக யார் நடிக்கணும்..? 5 நடிகைகளில் யார் தெரியுமா..? சர்வே விவரம்

0
1058
jayalalitha-survey

சாவித்திரியின் பயோபிக் ஏற்படுத்திய அதிர்வால் அடுத்து எந்தெந்த நடிகைகளின் வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்று யோசித்தபோது ஜெயலலிதாதான் நமக்கு முதல் ஆளாய் மனதில் பதிகிறார்.

Jayaram Jayalalitha

அவரது பயோபிக் எடுத்தால் அதில் யார் ஜெயலலிதாவாக நடிப்பார் என்கிற கேள்வியை சர்வேவாக வெளியிட்டோம். அதில் பல வாசகர்கள் கலந்துகொண்டு தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதன் விவரங்கள் இதோ…

5.ஐஸ்வர்யா ராய்:
`எனக்கு பயோபிக் எடுத்தால் அதில் ஐஸ்வர்யா ராய்தான் நடிக்க வேண்டும்’ என ஜெயலலிதா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் இந்த சர்வேயில் ஐஸ்வர்யாவை இணைத்திருந்தோம். நிறைய பேர் கமென்ட்டில் ஜெ.வின் பேட்டியைக் குறிப்பிட்டே ஐஸ்வர்யாவைத் தேர்வு செய்திருந்தனர். மொத்தம் 4.8 சதவித ஓட்டுகளை வாங்கி ஐஸ்வர்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

Aishwarya Rai

4.வித்யா பாலன்:
14.8 சதவிகித வாக்குகளை வாங்கி நான்காவது இடத்தில் இருக்கிறார் வித்யா பாலன். ஜெயலலிதாவின் உடல்வாகு, யதார்த்த நடிப்பு என வித்யா பாலன் ஜெயலலிதாவுடன் பொருந்திப்போவதால் இவருக்கு அதிக வாக்குகள் அளித்திருக்கிறார்கள் வாசகர்கள். நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடித்து பிரபலமான வித்யா, தமிழ்ப்படங்களில் அதிகம் நடித்திருந்தால் இன்னும் அதிக வாக்குகள் வந்திருக்கும்.

vidya-balan

3.ஜோதிகா:

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, `36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து `மகளிர் மட்டும்’, `நாச்சியார்’ தற்போது `காற்றின் மொழி’ எனப் பெண்களை மையமாகக் கொண்ட கதைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அதனால் ஜெயலலிதாவின் பயோபிக்கிற்கு ஜோதிகா பொருத்தமாக இருப்பார் என அவருக்கு 15.8 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.

Jyothika

2.நயன்தாரா:

`70 – 80களில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வந்த ஜெயலலிதாவாக நடிக்க வேண்டும் என்றால் அதற்கு இப்போது லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் தானே சரியாக இருக்க முடியும்’ என்று 25 சதவிகித மக்கள் நயன்தாராவைத் தேர்வு செய்துள்ளனர். ஒரு வாரம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், முதல் மூன்று நாள்களுக்கு முதல் இடத்தில் இருந்த நயன்தாரா, இறுதியில் சில வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறார்.

Nayanthara

1.நித்யா மேனன்:

Nithya Menen

survey

இந்த சர்வேயில் வாசகர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறார் நித்யா மேனன். வித்யா பாலனைப் போன்றே ஜெயலலிதாவின் உடல்வாகு, யதார்த்த நடிப்பு நித்யா மேனனிடன் இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயப்பட்டவர் என்பதால் வித்யாவைவிட நித்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. இவருக்கு 25.4 சதவிகித மக்கள் வாக்களித்து முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.