தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. 2003ஆம் ஆண்டு தன் தந்தையின் தயாரிப்பிலும், சகோதரன் இயக்கியத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற படத்தின் மூலம் தான் ரவி சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அதனை தொடர்ந்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தீபாவளி, நிமிர்ந்து நில், தனிஒருவன் என்று பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பூமி. இந்த படம் விவசாய பிரச்சனையை மையமாக கொண்ட கதை. இருந்தும் இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லணும். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது.
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி.இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. மேலும், படத்தில் ஜெயம் ரவி உடைய கதாபாத்திரம் எல்லாம் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி திரையுலகிற்கு அறிமுகமாகி 19 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “எல்லாம் நேற்று தான் நடந்தது போல் தெரிகிறது! என் முதல் படமான ‘ஜெயம்’ படத்துக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று, நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன்.
இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது” என ஆரம்பித்து தந்தை, தாய், சகோதரர் ராஜா மற்றும் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர்கள், சக நடிகர்கள். தொழில்துறை நண்பர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி, எனது சிறந்த படைப்புகளை பாராட்டத் தவறாத. அதே நேரத்தில், அவர்களின் நேர்மறையான விமர்சனங்களால் எனது வாழ்க்கையை மேம்படுத்த உதவிய பத்திரிகை-ஊடகச் சகோதரர்கள் மற்றும் சமூக ஊடகத் துறையில் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறையப் பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது. என்றென்றும் பேரன்புடன், உங்கள் ஜெயம் ரவி” என உருக்கமுடன் குறிப்பிட்டு பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.