படத்தின் சம்பளத்திற்கு பதிலாக போயஸ் கார்டனில் வீடா? நடிகர் ஜெயம் ரவியா இப்படி.!

0
1083
Jayam-Ravi
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் ரஷி கண்ணா நடிப்பில் வெளியான ‘அடங்காமறு ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 

-விளம்பரம்-

இந்த படம் நீண்ட களமாக கிடப்பில் இருந்து வருகிறது.
தற்போது கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி, இந்த படங்களை முடித்து விட்டு ஸ்க்ரீன் சீன் மீடியா பட நிறுவனம் தயாரிக்கும் 3 புதிய படங்களில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

jayam-Ravi

இந்த மூன்று படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சம்பளத்திற்கு பதிலாக போயஸ் கார்டனில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை ஜெயம் ரவி சம்பளமாக பெற்றார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இதுகுறித்து பேசிய அவர், போயஸ்கார்டனில் வீடு பெற்றதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், ஒரு தகவலை வெளியிடும் முன் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று வெளியிடுமாறு 2 நாட்களாக பரவிவந்த வதந்திக்கு ஜெயம் ரவி முற்றுப்புள்ளி 

Advertisement