தன் மகன் செய்த காரியத்தால் ஜெயம் ரவி நெகிழ்ச்சி ! ஏன் தெரியுமா ! காரணம் இதோ

0
1535
jayam-ravi

இந்தியாவின் முதல் விண்வெளிப்படம் தமிழில் உருவாகும் டிக் டிக் டிக் தான். ஜெயம் ரவி நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். இந்தியாவில் இதுவரை விண்வெளி சம்மந்தப்பட்ட படம் ஒன்று வந்ததில்லை என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

தற்போது வரை கிட்டத்தட்ட 4 மில்லியன் வியூஸ் மற்றும் 150K லைக்ஸ் பெற்றுள்ளது. ஜெயம் ரவியின் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருப்பது இதுவே முதன்முறை. ஆனால், சமீப காலமாக வித்தியாசமான படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் சென்றுகொண்டிக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் சிறு கேரக்டரில் நடித்துள்ளார். இதற்காக தற்போது டப்பிங் பேசியுள்ளார் ஆரவ். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீக்கரமாக டப்பிங் பேசி முடித்துள்ளார் ஆரவ். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அப்பா ஜெயம் ரவி தன் ட்விட்டர் பக்கத்தில் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு பெருமைமிகு தந்தையாக உணர்கிறேன். இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.