மனைவி புடவை வியாபாரத்துக்கு புடவை கட்டி விளம்பரம் கொடுத்த பிரபல நடிகர்.! புகைப்படம் உள்ளே

0
1634

மலையாள படங்கள் எப்போது மலையாள ரசிகர்களை தாண்டி மற்ற மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும். சாமீப காலமாக மலையாள படங்கள் மற்ற மொழி மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உதாரணமாக “பிரேமம்”, “புலிமுருகன்” போன்ற படங்களை கூறலாம்.

jayasurya

மலையாள படங்களின் முக்கிய சிறப்பம்சமே வித்யாசமான கதைக்களங்களும், அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களும் தான். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந் வருகிறார்.

மலையாள மொழி படங்களில் வித்யாசமான கதைக்களங்களை தேர்தெடுத்து நடிக்கும் இவர் சமீபத்தில் மலையாள இயக்குனர் ரஞ்சித் ஷங்கர் இயக்கிய “ஞான் மெரிகுட்டி ” என்ற படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

jaisurya

இந்நிலையில் நடிகர் ஜெயசூர்யா தனது மனைவிக்காக புடவை கட்டி ஒரு விளம்பர போஸ்டருக்கு போஸ் கொடுத்துள்ளார். இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை, அவரது மனைவி சரித்ரா புடவை வியாபாரம் ஒன்றை செய்து வருவதால், நடிகர் ஜெயசூர்யா அவரது வியாபாரத்தை பிரபலப்படுத்தவே புடவை கட்டி அவரது வியாபாரதிர்க்கு விளம்பரம் செய்துள்ளாராம்.