‘நான் தமிழ் பெண் கிடையாது, மலையாளி’ – ஜோ பட நடிகை சொன்ன தகவல், காரணம் இது தான்

0
293
- Advertisement -

ஜோ பட நடிகை குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரியோ ராஜ். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சி, சீரியலில் தான் பணியாற்றி இருந்தார். அதற்கு பின் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். பின் இவர் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் கடைசியாக ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜோ.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியிருந்தார். விஷன் சினிமா ஹவுஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் ரியோ ராஜுடன் மாளவிகா மனோஜ், பவ்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் ரியோ ராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க இவருடைய வகுப்பில் மலையாள பெண்ணான மாளவிகா மனோஜ் சேர்கிறார். இவரை முதல் முறை பார்த்ததுமே ரியோராஜ் காதலிக்கிறார். பின் மாளவிகாவும் காதலிக்க தொடங்கி நான்கு வருடங்களுக்கு இருவருமே நெருக்கமான காதலர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜோ படம் :

பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு பண்ண போது இவர்கள் காதலால் மாளவிகா வீட்டில் சில சர்ச்சைகள் வந்து பிரிகிறார்கள். இருவருக்குமே தனித்தனியாக நிச்சயதார்த்தம் நடக்கிறது. இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது. மேலும், இந்த படத்தில் சுசித்ரா என்ற கதாபாத்திரத்தில் ரியோ காதலியாக வந்தவர் மாளவிகா மனோஜ் .

மாளவிகா மனோஜ் குறித்த தகவல் :

தமிழில் இது தான் இவருக்கு முதல் படம். இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் மாளவிகா மனோஜ். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி இருந்த ‘பிரகாஷன் பரக்கட்டே’ என்ற படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ‘வாயாடி’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே இவருக்கு பெரிய அளவு மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

மாளவிகா திரைப்பயணம் :

இதற்கு பிறகுதான் இவர் தமிழில் ‘ஜோ’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதில் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் மாளவிகா காட்சிகள் தான் வைரலாகி இருந்தது. இதனால் பலருமே மாளவிகா தமிழ் பெண் தான் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மனோஜ், ஜோ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

மாளவிகா மனோஜ் பேட்டி:

அதோடு ஜோ படம் தொடர்பாக ரீல்ஸ் எல்லாம் இணையத்தில் அதிகமாக வைரலாகி இருந்தது. இப்போதெல்லாம் ரீல்ஸ்களை பார்த்து தான் மக்கள் படத்தையே முடிவு செய்கிறார்கள். நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை சுசி என்று தான் அழைக்கிறார்கள். இந்தப் படத்திற்கு முன்பு கேரளாவில் என்னை யாருக்குமே தெரியாது. இப்போது என்னை நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு காரணம் ஜோ படம் தான். கேரளாவில் ஜோ படம் வெளியான முதல் நாள், நான் தமிழ் பெண் என்று பலரும் நினைத்துக் கொண்டார்கள். ஆனால், நான் ஒரு மலையாளி தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement