பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ என்ற பாடல் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதி இருக்கிறார். நேற்று மாலை 6 மணிக்கு வெளியான இந்த பாடல் வெளியான சில மணி நேரத்தில் பல சாதனைகளை குவித்தது. இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடி இருக்கிறார்கள். மேலும், இந்த பாடலின் விஜய் – பூஜா ஹேக்டே ஜோடியை விட ஜோனிதாவை தான் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். மேலும், பூஜாவை விட ஜோனிதாவையே நாயகியாக போட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த பாடல் வெளியானதில் இருந்தே பூஜா ஹேக்டேவை விட ஜோனிதாவின் மீம்கள் தான் அதிகம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோனிதா காந்தி தமிழில் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற ‘செல்லம்மா’ பாடலை கூட ஜோனிதா அனிருத்துடன் இணைந்து பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
வைரலாகும் ஜோனிதா மீம்ஸ் :
இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. அதோடு சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலின் மூலம் ஜோனிடா காந்தி அவர்களுக்கு சோஷியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது.மேலும், ஜோனிட காந்தி அவர்கள் இந்தோ- கன்னடிய பாடகி ஆவார். இவர் டெல்லியில் பிறந்து இருந்தாலும் தன்னுடைய ஏழு வயதிலேயே கனடாவிற்கு சென்றுவிட்டார்.
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தான் பாடகியாக இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் பாடினார்.
செல்லம்மா மூலம் பிரபலமான ஜோனிதா :
இதற்குப் பிறகு இவர் 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா என பல படங்களில் பாடியுள்ளார். பீஸ்ட் பாட பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பலரும் ஜோனிதா ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் ஆசைப்பட்டபடி ஜோனிதா தற்போது தமிழில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
நடிகையாக என்ட்ரி கொடுப்பாரா ஜோனிதா :
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/ டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் ஜோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரரைப்போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை தற்போது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டே வெளியிட்டு இருந்தது.