சீரியல் கில்லர் படங்கள் தெரியும், ஆனால் இது – ஜோதி பட விமர்சனம் இதோ.

0
1070
jothi
- Advertisement -

தற்போது வெளியாகியிருக்கும் படம் ஜோதி. இந்த படத்தில் ஷீலா ராஜ்குமார், வெற்றி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஜோதி படத்தின் விமர்சனத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். அவர் வீட்டில் தனித்திருக்கும் போது ஒரு மர்ம நபரால் தாக்கப்படுகிறார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் க்ரிஷா குரூப் வந்து பார்க்கிறார். அப்போது ஷீலா ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார். அவருக்கு அவசர அவசரமாக சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்து கடத்தி இருப்பது தெரிய வருகிறது. உடனே க்ரிஷா தன் கணவரான ஹீரோ வெற்றிக்கு போன் செய்கிறார்.

எஸ்.ஐயான வெற்றி இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். பின் விறுவிறுப்பாய் படத்தின் கதை தொடர்கிறது. பிரைம் டைமில் வெளியாகும் சீரியல் போல அனாவசியமான காட்சிகள், உணர்ச்சிகளை கடத்தப்பட்ட சென்டிமென்ட் என எங்கெங்கோ கதை சுற்றிக்கொண்டிருக்கிறது. ஹீரோவாக படத்தில் வரும் வெற்றி பல காட்சிகளில் அவருடைய எக்ஸ்பிரஸன் செட்டாகவில்லை. ஆனால், படம் முழுக்க கொஞ்சமும் வெரட்டி காட்டாமல் ஒரே மாதிரி முக பாவனை உடன் நடித்து இருக்கிறார் வெற்றி.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் இவருக்கு போட்டியாக குழந்தையை தொலைத்த தந்தையான ‘ராட்சஷன்’ சரவணனும் எனக்கு இவ்வளவு தான் வரும் என்ற தோனியிலேயே படத்தில் அப்பப்ப வந்து செல்கிறார். இவர்களை அடுத்து ஷீலா ராஜ்குமார் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. சமூக அவலத்தை படமாக எடுக்க வேண்டும் என இயக்குனர் நினைத்தது சரிதான். ஆனால், சமூக பொறுப்போடு சேர்த்து கொஞ்சம் கதை மீதான பொறுப்பையும் காண்பித்திருக்கலாம்.

மேலும், படத்தில் போலீஸ் விசாரிக்க விசாரிக்க புதிதாக கதாபாத்திரங்கள் கிளைமாக்ஸ் வரை வந்து கொண்டே இருக்கிறது. துளி அளவு கூட விறுவிறுப்பு இல்லாமல் காட்சிகள் இருக்கிறது. அதிக பிளாஷ்பேக் கொண்ட தமிழ் படம் என கணக்கு எடுத்து பட்டம் கொடுக்கும் அளவிற்கு திரைக்கதை இருக்கிறது. நல்ல வேலை பிறந்த குழந்தைக்கு மட்டும் பிளாஷ்பேக் வைக்கவில்லை. பொதுவாக நடிகர்கள் படத்தில் சொதப்பும் போது தொழில்நுட்ப குழுவின் உழைப்பு படத்தை தாங்கி நிற்கும்.

ஆனால், இந்த படத்தில் அவர்களும் தங்களுடைய பங்கிற்கு பார்வையாளர்களை சோதிக்க வைத்திருக்கிறார்கள். இசை, பாடல்கள் எல்லாம் சொல்லவே வேண்டாம். கேட்க முடியாத அளவிற்கு இருக்கிறது. ஒளிப்பதிவு மட்டும் வேண்டும் என்றால் ஓகே சொல்லலாம். குற்றவாளி யாரென்று தெரிந்த பின்பு பழக்க தோஷத்தில் மறுபடியும் ஒரு பிளாஸ்பேக் என முடிவில்லாமல் இந்தத் அடித்திருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் பழங்கால பாணியில் சாமி சிலையின் முன் புறமாக ஆடி கோபத்தை கொட்டித் தீர்க்கிறாள் நாயகி. செயற்கைத்தனம் முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியும் இருக்கிறது.

Advertisement