சாலையில் இளநீர் குடித்த போது இறந்த மகன் – ரஜினி, கமலை ஆட வைத்த புலியூர் சரோஜாவின் அறிந்திராத சோக பக்கம்.

0
7873
puliyoor
- Advertisement -

40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் துள்ளியாடிய அவரை வீட்டிலேயே முடக்கியிருக்கிறது காலத்தின் மறுபக்கம்.
ஒருகாலத்தில் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பால் பரபரப்புடன் இருந்த அந்த வீடு, இன்று ஆள் ஆரவாரமில்லாமல் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அந்த வீட்டில் தனிமையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்தார் புலியூர் சரோஜா.தென்னிந்திய சினிமாக்களில் ஜொலித்த ஏராளமான நட்சத்திரங்களின் வளர்ச்சியில் இவரின் பங்கு முக்கியமானது. இந்திய சினிமாவில் கோலோச்சிய நடன இயக்குநர்களில் முக்கியமானவர்.சரோஜாவின் பூர்வீகம் சேலம் ஆகும். இவர் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். சரோஜா சிறுமியாக இருந்தபோதே அவரது குடும்பம் சென்னை ராயபுரத்தில் குடியேறியது.

-விளம்பரம்-

சரோஜாவின் தாத்தா ஒரு வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர். பி. எஸ். சரோஜா தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். சரோஜா ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : சீரியல் கில்லர் படங்கள் தெரியும், ஆனால் இது – ஜோதி பட விமர்சனம் இதோ.

திரைப்பட வாய்ப்பு :-

வட்டரங்கு நிறுவனம் மூடப்பட்டாலும் தனது மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் ராசாசி கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர். ராசாசி சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராசாசியுடன் வந்திருந்த காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தவர். இவர் சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார். 1941-ல் வெளியான ‘மதன காமராஜன்’ திரைப்படக் குழுநடனம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். பின் ஜெமினியிலிருந்து வெளியேறி, ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடி பிரபலமானார்.

-விளம்பரம்-

எம்.ஜி.ஆர் சரோஜாவுக்கும் இடையான நட்பு :-

எம்.ஜி.ஆர் உடனான நட்பை பற்றி பேசி அவர் அனுபவங்களை கூறினார். ஆரம்பத்திலிருந்தே என்னோட டான்ஸ் திறமையைக் கவனிச்சுகிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தோழான்னு என்கிட்ட உரிமையா பழகுவார். இதய வீணை படத்துல எம்.ஜி.ஆர் குதிரையில வந்து நடிகை லட்சுமியைத் தூக்கிட்டுப் போற மாதிரியான காட்சியில என்னை டூப்பா பயன்படுத்தினார். அந்த சீனை எடுத்து முடிச்சதும், ஆனந்த விகடன் மணியனைக் கூப்பிட்டு, சரோஜாவுக்கு 5,000 ரூபாய் கொடுத்திடுங்கன்னு சொல்லியிருக்கார். அதன்படி அந்தத் தொகை எனக்குக் கிடைச்சதும் பயங்கர அதிர்ச்சியானேன். மதியம் சாப்பிட்டுகிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
அவரோட ரூமுக்குப் போனேன். அப்போ நான் குரூப் டான்ஸர். அதனால, `ஒரு பாட்டுல குரூப் டான்ஸ் ஆடுனா, பிடித்தம் போக 225 ரூபாய்தான் எங்களுக்குக் கொடுப்பாங்க. எனக்கு ஆயிரக்கணக்குல இதுவரைக்கும் யாருமே சம்பளம் கொடுத்ததில்ல. இவ்வளவு பணம் வாங்க பயமா இருக்கு’ன்னு தயக்கத்துடன் சொல்லிக்கிட்டே அவர் முன்னாடியிருந்த டேபிள் மேல பணத்தை வெச்சேன். ரிஸ்க்கான அந்த சீன்ல நீ டூப் போட்டு நடிச்சதாலதான் இந்தப் பணம்னு அவர் சொல்லி அந்தப் பணத்தை என்கிட்ட கொடுத்ததுடன், அவர்கூட உட்கார வெச்சு என்னைச் சாப்பிட வெச்சார். அப்போதிலிருந்து அவருடன் என் நட்பு இன்னும் நெருக்கமாச்சு.

சில்க் ஸ்மிதாவை கிள்ளி ஷாட் எடுத்தேன் :-

1980’ஸ் காலகட்ட பாடல்களில் பெரும்பாலன பாடலுக்கு சரோஜாதான் கோரியோகிராபி செய்திருக்கிறார். அந்த அனுபவங்களைச் சொல்லும்போது, வழக்கத்தைவிட சரோஜாவின் முகத்தில் புத்துணர்வு கூடுகிறது. நேத்து ராத்திரி யம்மா பாட்டுல சில்க் ஸ்மிதா சரியா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கல. முதல் டேக் சரியா வரல. அப்பல்லாம் ஃபிலிம் ரோலைக் கூடுமானவரை விரயம் செய்ய மாட்டோம். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் என்னைப் பார்த்து முறைச்சார். ரெண்டாவது டேக் போகலாம்னு சொல்லி, ஸ்மிதாவோட தொடையைப் பிடிச்சு கிள்ளி விட்டேன். அந்த வலியிலேயே அவளும் சிணுங்கலா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கவே, டேக் ஓகே ஆகிடுச்சு. பெரும்பாலும், அதிகமா செலவு வைக்காம, சிம்பிளாவும் சீக்கிரமாவும் பாட்டு எடுத்து முடிச்சுடுவேன். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா பாடல் ஷூட்டிங் நேரத்துல ரஜினிக்கு தோள்பட்டையில காயம் இருந்திருக்கு. அது தெரியாம, ஹெவி மூவ்மென்ட்ஸ் கொடுத்து விடாப்பிடியா அவரை ஆட வெச்சுட்டேன். அதன் பிறகுதான் அவருக்குக் காயம் இருக்குற விஷயம் எனக்குத் தெரிஞ்சது. உடனே, ஸாரிடா தம்பின்னு அவர்கிட்ட சொன்னேன்.

கமல்,ரஜினியுடன் இருந்த புகைப்படம்

கமலை வெச்சு அம்மம்மா வந்தந்திந்த சின்னக் குட்டி பாட்டுக்கு கோரியோகிராபி செஞ்சுகிட்டிருந்தேன். அங்க வந்த ஸ்டில் போட்டோகிராபர் ஒருத்தர், உங்களையும் கலலையும் போட்டோ எடுக்கிறேன்’னு சொன்னார். கமலும் நானும் போஸ் கொடுத்துகிட்டிருந்தோம். பக்கத்து செட்டுல ஷூட்டிங்ல இருந்த ரஜினி, நானும் கமலும் ஒண்ணா வேலை செய்யுறதைக் கேள்விப்பட்டு அங்க வந்தார். அக்கா, நான் இல்லாம போட்டோ எடுக்குறீங்களே’ன்னு கேட்க, நீங்க ரெண்டு பேருமே என் ரெண்டு கண்கள் போலடான்னு சொல்லி அவங்க கூட எடுத்துகிட்டதுதான் இந்த போட்டோ-அந்தப் புகைப்படத்தைக் காட்டி, அதன் பின்னணிக் கதையைக் கூறுகிறானார் சரோஜா. அதில், கமலுக்கும் ரஜினிக்கும் இடையே நெருக்கமாக அவர் காட்சிதரும் புகைப்படம், அவருக்கான முக்கியத்துவத்தையும் திரை நட்சத்திரங்கள் அவர்மீது வைத்திருந்த பாசத்தையும் உணர்த்துகின்றன.

தமிழ் சினிமாவில் சரோஜா அடையாளம் தெரியாமல் போன தருணம் :-

நடனத்துறையில் வெற்றி வலம் வந்த சரோஜாவின் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது, அவருடைய மகனின் இழப்பு. மகன் சத்தியநாராயணனை விபத்து ஒன்றில் பறிகொடுத்தவர், அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். கால்ல சக்கரம் கட்டுன மாதிரி அப்போ ஓடி ஓடி உழைச்சேன். என் பையன் சத்யாவோ, இந்தச் சொத்து எதையுமே நான் அனுபவிக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்லுவான். காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுகிட்டிருந்தான். தஞ்சாவூர்ல ஒருநாள் தன் நண்பனுடன் ரோட்டோரத்துல நின்னு இளநீர் குடிச்சுகிட்டிருந்திருக்கான்.

அந்த வழியே வேகமா போன பஸ் ஒண்ணு அவன் மேல ஏறினதுல சம்பவ இடத்துலயே என் புள்ளை இறந்துட்டான். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுக்கு அப்புறமா என்ன நடந்துச்சுனு தெரியாத அளவுக்கு பிரமை பிடிச்ச மாதிரி ஆகிட்டேன். அவனே போனபிறகு சொத்து சுகம் எதையும் அனுபவிக்க விருப்பமில்ல. `இதெல்லாம் நீ சம்பாதிச்சு சேர்த்த சொத்து. உன் விருப்பம்போல செய்’ன்னு என் வீட்டுக்காரர் சொன்னார். இப்போ வசிக்குற இந்த வீடு உட்பட எங்களோட எல்லாச் சொத்துகளையும் தானம் செய்யுறதா எழுதி வெச்சுட்டோம்” என்று உருக்கமாகச் சொல்பவர், மகனின் நினைவாகப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அதில் குறைந்த கட்டணத்தில் ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

Advertisement