சூரி பசங்களா இது.என்ன இப்படி வளர்ந்துட்டாங்க. சூரி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ.

0
2981
soori
- Advertisement -

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது என்றும், பல முன்னெச்சரிக்கைகள் உடன் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உலகில் உள்ள மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்தியாவில் 979 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

-விளம்பரம்-

மேலும், கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம், காவல்துறை,மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் உயிரை பணய வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் சூரியின் பிள்ளைகள் கொரோனா வைரஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். தற்போது இந்த வீடியோவை சூரி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர்கள் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : இதுக்கு தான் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணியா ? விஷ்ணு விஷாலை கழுவி ஊற்றிய ரசிகர்கள்

- Advertisement -

வணக்கம் மக்களே, நாங்கள் சின்ன பசங்க தான். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். இந்த கொரோனா வைரஸினால் நிறைய பேர் நாளுக்கு நாள் இறந்து கொண்டே வருகிறார்கள். இந்தியா, வெளிநாடு என்று உலகமே இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளது. காவல்துறையும், மருத்துவர்களும் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால், மக்கள் அரசாங்கம் சொல்வதை கேட்கவே மாட்டுகிறார்கள்.

தயவு செய்து அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் வீட்டை விட்டு யாரும் வெளியில் வராதீர்கள் தானே. ஆனால், அதை கூட உங்களால் பண்ண முடியவில்லை. நான் இதை அதிகம் கிராம மக்களுக்காக தான் சொல்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் அதிகம் அரசாங்கம் சொல்வதை பொருட்படுத்தாமல், காதில் கேட்டுக் கொள்ளாமல் அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.

-விளம்பரம்-

உங்களையும் காப்பாத்தனும், இந்த உலகத்தையும் காப்பாத்தனும் இது உங்கள் கையில் தான் இருக்கிறது. ப்ளீஸ் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதை தாங்கிக் கொண்டு இந்த உலகை காப்பாற்ற தினமும் கைகளை நன்றாக கழுவுங்கள். எல்லாரையும் கையெடுத்து கும்பிடுறேன் வீட்டை விட்டு யாரும் வெளியில் வராதீர்கள். மருத்துவர்களுக்கும், காவல்துறைக்கும் மிக்க நன்றி. இதனைத் தொடர்ந்து சூரி அவர்கள் பேசியிருப்பது, பச்சைக் குழந்தைகள் சொல்கிறார்கள். அவர்களுக்கு தெரிவது கூட இந்த கிராமத்தில் இருக்கும் ஒரு சில பேருக்கு தெரிய மாட்டேன்கிறது.

இதையும் பாருங்க : இதனால் தான் நர்ஸ் வேலையை செய்யவில்லை. முதன் முறையாக கூறிய ஜூலி.

இப்படி எல்லாம் ஏன் விளையாடுகிறார்கள் என்று கேட்டதற்கு நாங்கள் தள்ளி தள்ளி தான் நிற்கிறோம் ஒன்றாக இல்லை என்று கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். உங்களுடைய வீரத்தை காமிக்கிற தருணம் இது இல்லை. கையெடுத்து கும்பிடுறேன் நம் உலகை காப்பாற்றுவோம். தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் என்று கூறியிருந்தார். சமீபத்தில் கூட நடிகர் சூரி அவர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த ஒரு வீடியோ ஒன்று செய்திருந்தார். அதில் அவர் கொரோனாவில் இருந்து காப்பாற்றி கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறியிருந்தார்.

Advertisement