ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் விமர்சனம்.!

0
2455
Jackpot
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது செகண்டு இன்னிங்ஸ்ஸை துவங்கியுள்ள ஜோதிகா, சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைக்களத்தைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் லீட் ரோலில் நடித்துள்ள ‘ஜாக்பாட் ‘ இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-
Image result for jyothika jackpot

கதை :

- Advertisement -

இந்த உலகில் இல்லாதவர்கள் என்பதே இருக்கக் கூடாது, அனைவருக்கும் அனைத்தும் இருக்க வேண்டும் இதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன். தமிழ் சினிமாவில் இந்த கதை ஒன்றும் புதிதான ஒரு விஷயம் அல்ல. ஆனால், இதே கதையை நிறைய காமெடி கொஞ்சம் மெசேஜ் என்று உருவாகியுள்ளது இந்த படம்.

இதையும் பாருங்க : அடுத்த வார தலைவர் போட்டிக்கு பங்குபெறுவது இவர்கள் தான்.! கசிந்த செம தகவல்.! 

அல்ல அல்ல அளிக்கும் அக்சய பாத்திரத்தின் நீதிக்கதையை நான் சிறு வயதில் கண்டிப்பாக கேட்டிருப்பம். அந்த கதையை நமக்கு முதலில் சொல்லிவிட்டு படம் ஆரம்பிக்கிறது. படத்தில் ஜோதிர் மற்றும் ரேவதி இருவரும் பணத்திற்காக பல்வேறு திருட்டுத் தனத்தை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for jyothika jackpot

பைக் திருடுவது, போலீஸ் வேடம் போட்டு மாமுல் வசூலிப்பது, போலி அரசு அதிகாரி என்று இப்படி பல்வேறு வேடங்களை போட்டு பணத்தை அபகரிக்கின்றனர். இவர்களது தேவை அனைத்தும் வெறும் பணம் மட்டும் தான் என்று காண்பிக்கபடுகிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் போலீசில் மாட்டிக்கொள்கின்றனர்.

அப்போது சிறையில் இருக்கும் ஒரு கிழவி அக்சய் பாத்திரம் குறித்து பேசுகிறார். மேலும்ம் அந்த அக்சய பாத்திரம் தற்போது எங்கு உள்ளது என்பதையும் அந்த கிழவி சொல்கிறார். அக்சய பாத்திரம் கிடைத்தால் தாங்கள் நினைப்பதற்கு மேலாக பணம் கிடைக்கும் என்று நினைக்கும் ஜோதிகா மற்றும் ரேவதி அந்த அக்சய பாத்திரம் இருக்கும் இடத்தை தேடி செல்கின்றனர்.

Image result for jyothika jackpot

பின்னர் அந்த அக்சய பாத்திரம் புதைத்து வைக்கபட்டிருக்கும் வீடு ஆனந்த் ராஜ்ஜுடையதாக இருக்கிறது. ஆனால், ஆனந்த் ராஜ் ஒரு பெரிய வில்லன். எனவே, ஆனந்த ராஜ் வீட்டில் இருந்து அந்த அக்சய பாத்திரத்தை எப்படி எடுத்தார்கள், ஜோதிகா மற்றும் ரேவதி இருவரும் எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்பது தான் கதை.

ப்ளஸ் :

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஜோதிகாவிற்கு பிறகு ஆனந்த் ராஜ் மற்றும் யோகி பாபு தான். அதிலும் ஆனந்த் ராஜ், மானஸ்தன், மானஸ்தி என்று இரண்டு கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். மேலும், கோலமாவு கோகிலா, A1 போன்ற படங்களில் நடித்த ரெடின் இந்த படத்திலும் அசத்தியுள்ளார்.

மொட்ட ராஜேந்தர் மற்றும் ஆனந்த் ராஜின் காம்பினேஷன் செம.

ஆனந்த் பெண் வேடம் போட்டு வரும் காட்சிகளில் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மைனஸ் :

படத்தில் நிறைய கதாபாத்திரங்களை காமெடிக்காக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அணைத்து நேரத்திலும் அணைத்து கதாபாத்திரத்தின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை

படத்தில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை மேலும் குறைகிறது.

10 காட்சிகளில் 4 அல்லது 5 காட்சிகளில் தான் நமக்கு சிறப்பு வரும்

படத்தில் ஜோதிகாவின் டப்பிங் கொஞ்சம் இயற்கை தன்மையை குறைக்கிறது. ராக்ச்சசி படத்தில் பேசிய தீபாவின் குரலை ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி தான் எழுகிறது.

இறுதி அலசல் :

இந்த படத்தின் இயக்குனரின் முந்திய படமான ‘குலேபகாவலி’ போன்ற ஓரளவிற்கு அதே கதை தான் இந்த படமும். ஆனால், ஹீரோக்கள் மட்டும் நடித்து வரும் முழு நீல காமெடி படத்தை ஹீரோயினையை வைத்தும் பண்ணலாம் என்று நிரூபித்துள்ளளார் இயக்குனர். படம் முழுவதும் வயறு குலுங்க சிரிக்க வைக்கவில்லை என்றாலும் மிகவும் மொக்கை காமெடி என்று சொல்ல முடியாத அளவிற்க்கு இந்த படம் இருகிறது. ஒரு முறை பார்க்கலாம் கொஞ்சம் சகிப்பையும் கலந்து

Advertisement