விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் பல விமர்சனங்களை சந்தித்து இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக் கொண்டார் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். இருந்தாலும் ஜூலி குறித்து பலரும் பயங்கரமாக திட்டி மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள். ஆனால், ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசினார்.
விஜய் பற்றிய வீடியோ:
அது போக, ஜூலி சொந்தமாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜூலி சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். இவர் dmk கட்சியில் சேர்ந்ததில் இருந்தும் கடந்த சில வாரங்களாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து பேசி வரும் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=r1BoEMKVVNs
ஜூலி விவகாரம்:
குறிப்பாக விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு ஸ்டோரில் இருந்து ஜூலி, விஜய்யை விமர்சித்தும் தாக்கியும் பேசி வருகிறார். இதனால் சோசியல் மீடியாவில் ஜூலியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜயின் மீது நடிகை ஜூலி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஜூலி, விஜய் பேசிய குட்டி கதை குறித்து கருத்து தெரிவித்ததற்காக என்னை தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், உறுப்பினர்கள், விஜய் ரசிகர்கள் எல்லோருமே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=gFeABuHhwBM
புகாரில் சொன்னது:
குறிப்பாக கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்பு படுத்தி ஆதாரம் இல்லாமல் பொய்யான வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உட்பட எட்டு பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் செய்ய வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.






