கடந்த சில வாரங்களாகவே தவெக விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்
சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து விஜய் அவர்கள் உரையாடி இருந்தார். அதில் விஜய் அவர்கள் ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார். இதற்கு பிக் பாஸ் ஜூலி, உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள். ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லு கட்டு காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.
விஜய் பற்றி சொன்னது:
இது மிகப்பெரிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் ஜூலியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்கள். பின் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருந்தும் பலர் ஜூலியை திட்டியும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி திராவிட அரசியலுக்கு ஆதரவாகவும், விஜய்யை விமர்சித்தும் பேசி இருந்த கருத்துதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜூலி வீடியோ:
அதில் அவர், நம்மை வளர்த்துவிட்ட திராவிட அரசை டெல்லியில் இருப்பவர்கள் சிபிஐ ரைடுகள் மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த மாபெரும் இயக்கத்தை வீழ்த்த பார்க்கும் சூழ்ச்சிகளுக்கு எதிராக நான் குரல் கொடுக்க இருக்கிறேன். இப்போது நிறைய திரைத்துறை தளபதிகள் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குகளை பிரித்து எப்படியாவது மாநிலத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். இதை டெல்லி உட்பட மற்ற மாநிலங்களிலும் செய்திருக்கலாம். ஆனால், இங்கே முடியாது.
https://www.youtube.com/watch?v=LbxG-U8g75Q
விஜய் பற்றிய விமர்சனம்:
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் சிம்ம சொப்பனமாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார். என்னை பொருத்தவரை தளபதி என்றால் மு க ஸ்டாலின் மட்டும்தான். தமிழ்நாடு ஒரு வலுவான திராவிட கோட்டை. எந்த ஒரு ஸ்டார், கடப்பாரையைக் கொண்டும் இந்த கோட்டையை அசைக்க முடியாது. இந்த கோட்டைக்கு முன்னால் எங்களை போன்று சிறு தடுப்புகள் இருக்கிறோம். எங்களையே உங்களால் அசைக்க முடியாது. எவ்வளவு அவதூறுகளை பரப்பினாலும், கேரக்டரை தவறாக பேசினாலும் நாங்கள் எதற்கும் பயப்பட போவதில்லை என்று பேசி இருக்கிறார்.






