என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா.! ஜூலியின் புதிய புகைப்படத்தை வறுத்தெடுத்த ட்விட்டர் வாசிகள்.!

0
1340
julie
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “வீர தமிழச்சி” என்ற  நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். 

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா ஆர்மி, ரைசா ஆர்மி, மும்தாஜ் ஆர்மி என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆர்மி இருப்பது போல ஜூலிக்கு ஆர்மி இருக்கத்தான் செய்கிறது. 

- Advertisement -

என்ன, இந்த ஆர்மி ஜூலி எதை செய்தாலும் கிண்டலடித்து வருகின்றனர். கடந்த சில மாதமாக ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அதற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான். இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர்.

ஆனால், ஜூலி அதை பற்றி எதனையும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் என்னுடைய சிறப்பான நாள், என்னுடைய பேஸ்ட்டியுடன் என்று கூறி ரஜித் என்பவரை டேக் செத்துள்ளார். இதுநாள் வரை மார்க்கை பேஸ்டி என்று கூறிவந்த ஜூலி இப்போது வேறு ஒருவரை பேஸ்டி என்று கூறுவதால், என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement