BMW முதல் Porsche வரை ஒரே நம்பர், தற்போது Lamborghini காருக்கும் அதே நம்பர்(இதுக்கு இதனை லட்சமா)

0
871
NTR
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜூனியர் என்டிஆர் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞர், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் முன்னாள் ஆந்திர மாநிலம் முதல்வர் என். டி. ராமாராவ் உடைய பேரன் என்பது குறிப்பிடத்தக்கது இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றனர்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் அவர்கள் தான் வாங்கிய சொகுசு காரின் ஃபேன்சி நம்பருக்காக லட்சக்கணக்கான அளவில் செலவு செய்ததாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் அதிக மதிப்பிலான சொகுசு கார்களை வாங்குவது வழக்கமான ஒன்று.

இதையும் பாருங்க : ரோஜா தொடரில் இருந்து வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – இனி அவருக்கு பதில் இவர் தானாம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்கள் சமீபத்தில் 3.16 கோடி மதிப்பிலான Lamborghini கார் ஒன்று வாங்கியிருந்தார். மேலும், அந்த காரின் ஃபேன்சி நம்பருக்குகாக 17 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்ன பேன்சி நம்பர் என்றால் அது TS09 FS 9999.

இவரிடம் ஏற்கனவே BMW 720LD, Mercedes-Benz GLS 350d, LR Range Rover Vogue and Porsche 718 Cayman போன்ற பல வகையான சொகுசு கார்கள் இருக்கிறது. அதன் பதிவு எண்கள் எல்லாமே 9999 தான். அதனால் தான் இந்த காருக்கும் அதே எண்ணை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறார் தற்போது ஜூனியர் என்டிஆர் அவர்கள் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement