ரோஜா தொடரில் இருந்து வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – இனி அவருக்கு பதில் இவர் தானாம்.

0
1458
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களுக்கு இடையே கடும் போட்டியில் நிலவுகிறது. ஆனால், எப்போதும் அதில் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடிக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-
May be an image of 2 people

இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் TRPயில் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது என்றும் சொல்லலாம். ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும் ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : மேடையில் லட்சுமி ராயிடம் ரோபோ ஷங்கர் நடந்து கொண்ட விதமும் பேசிய விதமும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

- Advertisement -

மேலும், இந்த தொடரில் அஸ்வின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அவர் அறிவித்து இருந்தார். இதுகுறித்து பதிவிட்ட அவர், ‘உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி உங்கள் அஸ்வின் நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறார்.

உங்களை ஏமாற்றியதற்க்கு மன்னித்துவிடுங்கள். ஆனால், நீங்கள் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ என்று கூறி இருந்தார். இந்த தொடரில் இருந்து வெங்கட் வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வானத்தை போல,  கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான சன்கரேஷ் தான் புதிய அஷ்வினாக நடிக்க இருக்கிறாராம்.

-விளம்பரம்-
Advertisement