லிப் லாக் காட்சியில் நடிக்க கார்த்திக்கு ஜோதிகா கொடுத்த அட்வைஸ். நடிகை சொன்ன சீக்ரெட்.

0
41998
Karthi-Jyothika
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஸ்வரூபம் எடுத்து வருகிறார் நடிகை கார்த்திக். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கைதி’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் இது தான் என்ற சாதனையையும் செய்தது. மேலும், நடிகர் கார்த்திக்கின் திரை பயணத்தில் இந்த படம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அவர்கள் தனது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்திருந்தார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும்இயக்கி இருந்தார். இந்த படத்தில் கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடித்திருந்தார். இவர்களுக்கு அம்மா,அப்பாவாக சீதா,சத்யராஜ் ஆகியோர் நடித்துஇருந்தனர். அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிநடித்திருந்தார் .

இதையும் பாருங்க : யாருடன் நட்பு, காதல், திருமணம். தென்னிந்திய சினிமாவின் மூன்று விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா.

முதன் முறையாக தனது அண்ணியுடன் இணைந்து கார்த்திக் நடித்த முதல் படம் இது என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எதிர்பார்த்தபடி இந்த படம் அமையவில்லை. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருந்தார். இவர் தமிழில் ஏற்கனவேய வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், தம்பி படத்தில் லிப் லாக் காட்சியில் தன்னுடன் நடிக்க கார்த்திக்கு அவரது அண்ணி ஜோதிகா தான் டிப்ஸ் கொடுத்தார் என்று கூறியுள்ளார் நிகிலா.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்த படத்தில் எனக்கு எடுக்கபட்ட முதல் காட்சியே லிப் லாக் சீன் தான். அந்த சீனில் நடிப்பதற்கு கார்த்தி முதலில் மிகவும் பதட்டம் அடைந்தார், பிறகு கார்த்திக்கின் அண்ணி ஜோதிகா கொடுத்த டிப்ஸ், அட்வைசுக்கு பிறகு தான் அந்த காட்சியில் அவர் நடித்தார். உண்மையிலேயே தனது அண்ணி ஜோதிகா முன்னிலையில் லிப் லாக் கொடுக்க வேண்டுமா என அவர் யோசித்தார். பின்னர் காட்சிக்கு தேவை என்பதன் அடிப்படையில் அதை செய்தார் கார்த்திக் என்று கூறியுள்ளார் நிகிலா .

Advertisement