ஹல்ல்லோவ்…நான் மது பேசுறேன்..!ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தின் விமர்சனம்..!

0
1324
Kaatrinmozhi
- Advertisement -

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் மற்றும் நடிகை ஜோதிகா கூட்டணியில் வெளியாகியுள்ளது ‘காற்றின் மொழி’ திரைப்படம். நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சில் ஜொலித்தாரா இல்லையா என்று பார்ப்போம்.

-விளம்பரம்-

kaatrin

- Advertisement -

படம்:- காற்றின் மொழி
இயக்குனர்:- ராதா மோகன்
நடிகர்கள்:- ஜோதிகா, இத்தார்த், எம் எஸ் பாஸ்கர், லட்சுமி மஞ்சு, சான்றா மனோபாலா, சிம்பு(சிறப்பு தோற்றம்)
இசையமைப்பளார் :- ஏ கே காஷ்யப்
தயாரிப்பு:- போஃப்தா மீடியா ஒர்க்ஸ்
வெளியான தேதி:-16-11-2018

கதைக்களம் :

-விளம்பரம்-

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் ரீமேக் தான் என்றாலும், ஒரிஜினலைவிட மிக அற்புதமாக படத்தை தந்திருக்கிறார் ராதாமோகன்.அதனை நம்மு ஊரு ஸ்டைலில் கச்சிதமாக நடித்துக்கொடுத்திருக்கிறார் கொடுத்திருக்கிறார் லேடி கமல் ஹாசன் ஜோதிகா.

கார்மெண்ட்ஸில் வேலைப்பார்க்கும் காதலான கணவன், பாசமான மகன் என சின்ன வட்டத்திற்குள் குடும்பத்தலைவியாக இருந்து வரும் ஜோதிகாவுக்கு மற்ற பெண்களை போல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. அக்காக்கள் இருவரும் நன்றாக படித்து வங்கி பணியில் இருக்கிறார்கள்.

ஆனால் ப்ளஸ் 2 பெயிலான ஜோதிகா வீட்டின் வேலைகளை செய்து வருகிறார். இருப்பினும் எப்படியாவது ஒரு மனம் நிறைவான வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் ஜோதிகாவின் ஆசை. ஆனால் அப்பாவின் மட்டந்தட்டம், சகோதரிகளின் கிண்டலுக்கு பயந்து அந்த ஆசையை மனதிற்குள் அடக்கி வைக்கின்றார்.

ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக நடிகை ஜோதிகாவிற்கு ரேடியோ ஸ்டேஷனில் ஆர் ஜேவாக வேலை கிடைத்துவிடுகிறது. தினம் தினம் முகம் தெரியாத நபர்களுடன் கொஞ்சி பேசும் வேலையை செய்து வருகிறார் ஜோதிகா.மனதுக்கு பிடித்த வேலையை சந்தோஷமாக பார்த்து கொண்டிருக்கும்போது இந்த வேலையால் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை ஜோதிகா எப்படி சமாளித்தார் என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

ப்ளஸ்:

ஒற்றை ஆளாக நின்று சாதிக்கிறார் மனுஷி! ராத்திரி பத்தரை மணிக்கு ஹஸ்கி வாய்சில் நேயர்களுடன் உரையாடுகிற நிமிஷங்கள்.குறிப்பாக ரயில் டிரைவரின் கேள்விக்கு ஜோ அளிக்கும் பதில். (ஓ… இப்படியொரு விஷயம் இருக்கான்னு நமக்கே தோணுகிற நேரம் அது) ஜோதிகாவை மட்டுமல்ல, ஒரு ரேடியோ ஸ்டேஷன் இயங்குகிற விதத்தையும் வெகுஜனம் வெகுவாக ரசிக்கும். படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் மயில் சாமியின் காமெடி நம்மை பலமாக சிரிக்க வைக்கிறது.அதே போல எம் எஸ் பாஸ்கரின் டைமிங் காமெடி சொல்லவே வேண்டியது இல்லை. மொத்தத்தில் இது ஜோதிகாவின் ஒன்னு உமன் ஆர்மி.

மைனஸ் :

படத்தில் குறை என்று கூறுவதற்கு ஒன்றுமே இல்லை.ஆனால், இது ஒன்றும் வித்யாசமான கதை ஒன்றும் இல்லை வழக்கமான ராதா மோகனின் மேஜிக் தான். படத்தில் சிம்பு எதற்காக வருகிறார் என்று தெரியவில்லை, அவர் வரும் காட்சிகளில் அழுத்தம் ஒன்றும் தெரியவில்லை. அதே போல யோகி பாபுவை இன்னும் சில காட்சிகளில் காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இறுதி அலசல் :

முன்பே சொன்னது போல இது ஜோதிகாவின் ஒன் உமன் ஷோ தான். அதே போல படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேடி தேடி பொறுக்கியுள்ளார் ராதாமோகன். குடும்ப ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு படத்திற்கு செல்லலாம். இம்முறையும் ராதா மோகன் மற்றும் ஜோதிகாவின் கூட்டணி சக்சஸ் தான்.

இந்த படத்திற்கு நமது Behind Talkies-ன் மதிப்பு 8/10

Advertisement