தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி’ ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா.
‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யிற்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டு சமீபத்தில் வெளியானது.
பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து சமீபத்தில் பேட்டி அளித்தனர்.அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர், பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்று சூர்யா -ஜோதிகா தம்பதியிடம் கேள்வி எழுப்பினர்.
2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பணத்தை ரோட்டேஷன் செயதுகொள்வோம் “ என்று சூர்யா சொன்ன போது இடையில் பேசிய ஜோதிகா, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளம் சூர்யாவின் ரசிகர்கள் தான். எனது ஒரு ட்ரெய்லர், டீசர் வந்தால் ஜோதிகா ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள் என்று கூறினார்.