முருகதாஸ் இப்படி செய்வதற்கு வேறு தொழில் செய்து பிழைக்கலாம்..! வறுத்தெடுத்த பிரபலம்

0
1008
murugadoss

விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை இல்லாமல் வெளியாகாமல் இருந்தது இல்லை. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘மெர்சல்’ படத்திற்கு கூட ஏகப்பட்ட அரசியல் ரீதியான பிரச்சனைகள் வந்தது. இருப்பினும் அது படத்திற்கு ஒரு இலவச ப்ரோமோஷனாக அமைந்திருந்தது.

sarkar

தற்போது விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்த நிலையில். படத்தில் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

படத்திற்கு ‘சர்கார் ‘ என்று இந்தியில் தலைப்பு வைத்திருப்பதை பல்வேறு தரப்பினரையும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், இந்தியில் தலைப்பை வைத்துள்ளதற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை மிகவும் காட்டமாக திட்டி தீர்த்துள்ளார்.

K Rajan

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசுகையில்’ஏ ஆர் முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் தான், ஆனால், இந்தி படங்களை இயக்குவதால் தமிழ் படத்திற்கு இந்தியில் தலைப்பு வைப்பது தவறு. இப்படி செய்வதற்கு அவர் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் ‘ என்று கூறியுள்ளது விஜய் ரசிகர்களை கடும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.