பிரபல இயக்குனர் மகள் நடத்தும் அர்மோரா கிளினிக். அமோகமாக நடந்த திறப்பு விழா..

0
4658
ks ravikumar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரமிக்க வைக்கும் பல பிரமாதமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் கே. எஸ். ரவிகுமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அதோடு இவரை சீனியர் டைரக்டர் என்று கூட சொல்லலாம். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனை படைத்து உள்ளது. மேலும், இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பார். இது வழக்கமான ஒன்றாக கே. எஸ். ரவிகுமார் வைத்து உள்ளார்.

-விளம்பரம்-

கே. எஸ். ரவிகுமார் அவர்கள் முதன் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு தான் இவர் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜஸ்வந்தி, மோனிஷா என்று மகள்கள் உள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் மகள் மோனிஷா தற்போது சென்னையில் புதிதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்து உள்ளார். கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி படிப்பை படித்து இருக்கிறார். இவருடைய கணவர் அரவிந்த் அவர்களும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அர்மோரா கிளினிக் திறப்பு விழாவிற்கு தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பேட்டியில் சரத்குமார் அவர்கள் உடல் நிலை பற்றியும், அழகு பற்றியும் அழகாக பேசியிருந்தார். பின்னர் பேட்டியில் கே எஸ் ரவிக்குமாரின் மகள் மோனிஷா அவர்கள் டெர்மடாலஜி கிளினிக்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் அவர் கூறியது, சென்னையில் அண்ணா நகரில் புதியதாக அர்மோரா என்ற டெர்மடாலஜி கிளினிக்கை திறந்து இருக்கோம். இதில் நிறைய அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சாதனங்கள் பயன்படுத்துகிறோம்.

-விளம்பரம்-

பொதுவாகவே நிறைய பேருக்கு நிறைய வியர்வை பிரச்சனை, முடி கொட்டுதல், முடி நீக்கம் போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். அந்த எல்லாப் பிரச்சினைகளும் எந்த ஒரு பின் விளைவுகள் இல்லாமல் life-long எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்கான இடமாக இது இருக்கும். கடவுள் கொடுத்த அழகான இந்த படைப்பை நம்ம மென்மேலும் அழகுப்படுத்த தான் இந்த மாதிரியான கிளினிக் உபயோகப்படுகிறது. நாங்கள் சொல்றத விட நீங்க வந்து பார்த்து தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க. நாங்களே எங்களை பற்றி சொல்லக் கூடாது என்று தன்னுடைய பேச்சை முடித்துக் கொண்டார்.

Advertisement