கடைசி வரை கடவுள் பக்தியே இல்லாமல் வாழ்ந்த மாரிமுத்துவிற்கு வழங்கப்பட இருந்த விருது – அதற்குள் இறந்து சோகம்.

0
727
- Advertisement -

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு பெரியார் விருது வழங்கப்படும் என்று கீ. வீரமணி தெரிவித்துள்ளார். எதிர் நீச்சல் தொடர் மாரிமுத்துவின் இறப்பு சின்னத்திரை மற்றும் சினிமா துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் உடலை கண்டு எதிர் நீச்சல் சீரியல் நடிகர் நடிகைகள் கதறி அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி இருந்தார். இவர் திமுகவில் இருந்துள்ளார்.

-விளம்பரம்-

கடவுள் மறுப்பாளர் மாரிமுத்து:

மாரிமுத்து இவர்கள் தீவிர கடவுள் மறுப்பாளர். இவர் பல நேர்காணல்களில் அதனை பதிவு செய்துள்ளார். இது குறித்து நேர்காணலில் அவர் கூறியது என்னவென்றால் கடவுள் இருந்து இருந்தால் கும்பகோணம் தீ விபத்தில் எப்படி அவ்வளவு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்து இருக்கும். என்றும் அவர் எழுப்பி இருந்தார். இவர் தன்னை ஒரு கடவுள் மறுப்பாளராகவே காட்டிக்கொண்டு வந்தார். இருப்பினும் அவர் மோடியை ஆதரிக்கும் வகையுளும் பேசி வந்தார்.

- Advertisement -

ஜோதிடம் பற்றி பேசியது:

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களை சரிமாரியாக கேள்விகளை எழுப்பி அவர்களை திணற வைத்து இருந்தார். பரிகாரங்கள் பற்றி ஜோதிடர்கள் பேசிய பின் பேசிய மாரிமுத்து நான் நீண்ட நேரமாக சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கிறேன். ஜோதிடர்கள் பேசுவதை எல்லாம் பார்த்தல் ரொம்ப கோபம் தான் வருகிறது. அதே நேரத்தில் சிரிப்பும் வருகிறது. விஞ்ஞானம் பற்றி பேசிய அவர் ஒரு அறிவியல் விஞ்ஞானி மூளையை பயன்படுத்தி செல்போன்னை கண்டுபிடித்தார்கள்.

ஆனால் அதனை ஜோதிடம் என்ற பெயரில் செல்பி எடுத்து நீக்கினால் பரிகாரம் என்று சொன்னால் அவர்கள் முன் நாம் என்ன பேசுவது. ஜோதிடம் பார்பவர்களையும் ஜாதகம் பார்பவர்களையும் மன்னிக்கவே கூடாது. அவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். எந்த ஒரு ஜோதிடராவது 2004 சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2015 ஆம் ஆண்டு சென்னையில் சுனாமி வரும் என்று சொன்னார்களா? 2020 கொரோனா வரும் என்று சொன்னார்களா? அவர்களை எல்லாம் மன்னிக்கவே முடியாது. இந்த நாட்டை பினோக்கி அழைத்து செல்வது இந்த ஜோதிடர்கள் மட்டும் தான். என்றும் அவர் கூறியிருந்தார்.   

-விளம்பரம்-

கி. வீரமணி கூறியது:

நடிகர் மாரிமுத்து அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பிறகு செய்தியளர்களை சந்தித்த அவர் உழைப்பால் உயர்ந்த தோழர் மாரிமுத்துவின் இழப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. நான் அவருடன் பழகியது இல்லை. ஆனாலும் அவருடைய கருத்துகளை அறிய முடிந்தது. அவருடைய பேட்டிகளை சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். சீரியலில் நடிப்பர்வகளை பார்க்க பொது வாழ்க்கையல் நேரம் இருக்காது.

அதே நேரத்தில் அவருடைய கொள்கைகளை அடிப்படையாக இருக்கும் அவருடைய பேட்டிகளை நான் பார்த்த போது விருது அளிக்க முடிவு செய்து இருந்தோம். நாங்கள் வருடம் வருடம் பெரியார் விருதினை அளிப்போம் அந்த வகையில் பொங்கல் அன்று அவரை பெரியார் திடலுக்கு அழைத்து அவருக்கு விருது வழங்க முடிவு செய்து இருந்தோம். ஆனால் இயற்கை அவரை பறித்து விட்டது. அவரை போன்ற பகுத்தறிவு இயக்கதிற்கு மீண்டும் இவரை போல ஒருவர் கிடைப்பாரா ? என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.          

Advertisement